நடிகர் மோகன்லாலின் 366-வது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் போஸ்டர்

Mohanlal's 366th film name is Athi Manoharam: மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் 366-வதாக உருவாகி வரும் படத்தின் டைட்டில் என்ன என்று இன்று விசு பண்டிகையை முன்னிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் மோகன்லாலின் 366-வது படத்தின் டைட்டில் இதுதான் - வைரலாகும் போஸ்டர்

அதி மனோகரம்

Published: 

15 Apr 2026 20:08 PM

 IST

மலையாள சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். இவரது வாரிசுகளான மகன் மற்றும் மகள் இருவரும் நடிப்புத் துறையில் என்ட்ரி கொடுத்தப் பிறகும் தொடர்ந்து நடிப்பு துறைக்கு ப்ரேக் கொடுக்காமல் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் மோகன்லாலின் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியானதை போல இந்த 2026-ம் ஆண்டு அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து பேட்ரியாட், த்ரிஷ்யம் 3, ஜெயிலர் 2 என அடுத்தடுத்து படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் 366-வதாக உருவாகி வரும் படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து இன்று 15-ம் தேதி ஏப்ரல் மாதல் 2026-ம் ஆண்டு விஷு பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மோகன்லாலின் 366-வது படத்தின் டைட்டில் இதுதான்:

அதன்படி நடிகர் மோகன்லாலின் 366-வது படத்திற்கு அதி மனோகரம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி எழுதி இயக்கி வருகிறார். மேலும் நடிகர் மோகன்லால் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மான் தயாரித்து வருகிறார். முன்னதாக நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் உருவான துடரும் படம் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… புத்தாண்டில் புதுப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த கௌதம் ராம் கார்த்திக் – வைரலாகும் வீடியோ

Follow Us
Related Stories
அப்சரா பென்சிலுக்கும் நட்ராஜ் பென்சிலுக்கும் உள்ள வித்தியாசம் 90ஸ் கிட்ஸ்களுக்கு தான் தெரியும் – தெலுங்கில் வெளியான இந்த 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக் தொடரை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்
தனுஷின் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல… 21 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் சச்சின் படம்!
KHxRK போன்ற ஒரு படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு ஒரு சிறப்பான தருணம் – அனிருத்
லப்பர் பந்து படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது – எஸ்.ஜே.சூர்யா சொன்ன விசயம்
விக்னேஷ் ராஜா நீ ஒரு மேதை – இணையத்தில் வைரலாகும் தனுஷின் பதிவு!
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி