Ashwath Marimuthu: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் எடுக்க காரணம் இதுதான் – அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!
Ashwath Marimuthu About Dragon Movie: தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குநராக கருதப்படுபவர் அஷ்வத் மாரிமுத்து. இவரின் இயக்கத்தில் சிலம்பரசன் STR51 என்ற படத்தில் இணையவுள்ளார். மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், டிராகன் படம் எடுத்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன்
தமிழில் நடிகர் அசோக் செல்வனின் (Ashok Selvan) நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே (oh MY Kadavule) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இந்த படமானது அவருக்கு முதல் படமாக அமைந்த நிலையில், மிகவும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது. திரைக்கதை முதல் பாடல்கள் வரை இப்படத்தில் ஒவ்வொன்றும் மக்களால் கொண்டாடப்பட்டிருந்தது. அந்த விதத்தில் இப்படத்தை அடுத்ததாக இவர் இயக்கியிருந்த திரைப்படம் டிராகன். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் (Kayadu Lohar) மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். காமெடி, எமோஷனல் மற்றும் கருத்துக்களுடன் கூடிய இப்படம், கிட்டத்தட்ட ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து ஹிட்டடித்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக சிலம்பரசனுடன் (Silambarasan) STR51 என்ற படத்தில் இணையவுள்ளார்.
இப்படமானது ப்ரீ-ப்ரொடக்ஷன் பணியில் இருக்கும் நிலையில், விரைவில் ஷூட்டிங் பணிகள் தொடங்குகிறது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த அஷ்வத் மாரிமுத்து, டிராகன் (Dragon) படத்தை எதற்காக எடுத்தேன் என்பது பற்றி கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: என்னவொரு நடிப்பு.. இந்திய சினிமாவிற்கான ரீசெட் பட்டன் – துரந்தர் 2 படத்தை பாராட்டிய ராஜமௌலி மற்றும் ராம் கோபால் வர்மா!
டிராகன் படத்தை எடுப்பதற்கான காரணம் குறித்து அஷ்வத் மாரிமுத்து பேச்சு:
அதில் அஷ்வத் மாரிமுத்து பேசுகையில், “ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு நான், உடனடியாக சிலம்பரசனுடன் ஒரு படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் அந்த படம் சில காரணங்களால், சிம்புவின் தரப்பிலு மற்றும் என் தரப்பிலும் தாமதமாகிவிட்டது. அந்த நேரத்தில் காத்திருப்பதற்கு பதிலாக நான் மற்றொரு படத்தில் பணியாற்ற விரும்பினேன். அந்த சமயத்தில்தான், லவ் டுடே படத்தின் வெளியீட்டிற்கு முன்பே பிரதீப் ரங்கநாதன் என்னை அணுகி, ப்ரோ, என்னோட பிரபலம் அதிகரித்த பிறகு, என்னை வைத்து படம் எடுப்பீர்களா? என கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: தனுஷின் ஸ்பீசிற்கு தயாரா? கர படத்தின் ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா?
நானும் லவ் டுடே படத்தை பார்த்து ரசித்தேன். அதன் பிறகுதான் சரி, பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து பணியாற்றலாம் என சொன்னேன். அப்போது அவருக்காக வித்யாசமான கதையை எடுத்திருந்தேன். அதுதான் டிராகன் . சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது” என அதில் தெரிவித்திருந்தார்.
சிலம்பரசனுடன் இணையும் படம் குறித்து அஷ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு:
Strong vibes♥️ Pumped up for shoot🧨
ST⭐️R Arrival soon ! @SilambarasanTR_ @archanakalpathi @Ags_production pic.twitter.com/iST3nVW4tz— Ashwath Marimuthu (@Dir_Ashwath) February 28, 2026
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, தற்போது சிலம்பரசனுடன் STR51 படத்தில் இணையவுள்ளார். இதில் சிலம்பரசன் காட் ஆப் லவ் என்ற வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு படக்குழு பாரடைஸ் என டைட்டில் வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ப்ரீ- ப்ரொடக்ஷன் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், வரும் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.