ரஜினிகாந்தின் அந்த படத்திற்கு நான் தான் முதலில் பேசப்பட்டேன் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
Ashwath Marimuthu talks about Thalaivar 173 Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தலைவர் 173 படம் குறித்து பேசியது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அஸ்வத் மாரிமுத்து - ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்னத்திரையில் நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல குறும்படங்களை இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் வெளியான பல குறும்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வாகவில்லை என்றாலும் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த முன்னணி இயக்குநர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் டிராகன். இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீஇதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது 3-வதாக சிம்புவை வைத்து படம் இயக்க எழுதி வருகிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தலைவர் 173 படத்தை நான் தான் இயக்க வேண்டியது:
நான் STR 51 படத்திற்காக எழுதிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் அது ஒரு முட்டுக்கட்டையில் நின்றுவிட்டது. அதனால் நான் வேறு ஒரு திரைக்கதையில் வேலை செய்யத் தொடங்கினேன். பிறகு RKFI மூலம் ரஜினிகாந்த் சார் படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. கதை சொல்லும்போது, இடைவேளையின்போது அவர் கதையில் முழுமையாக மூழ்கிவிட்டார், மதிய உணவு சாப்பிடக்கூட மறந்துவிட்டார்.
கதை சொன்னதிற்குப் பிறகு ரஜினி சார், திரைக்கதை அற்புதமாக இருப்பதாகக் கூறினார், மேலும் வில்லன் தேர்வு குறித்தும் விவாதித்தார். அது 1 மணி 40 நிமிட கதை சொல்லலாக இருந்தது. படம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டது, ஆனால் வேறு சில சூழ்நிலைகளால் அது நடக்கவில்லை. ஆனால் நிச்சயமாக நான் அந்தப் படத்தை ரஜினிகாந்த் சார் அல்லது கமல்ஹாசன் சாருடன் பின்னர் செய்வேன் என்றும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
Also Read… கருப்பு படத்தில் பாடியதில் மிகுந்த மகிழ்ச்சி – சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த சிலம்பரசன்!
இணையத்தில் வைரலாகும் அஸ்வத் மாரிமுத்து பேச்சு:
#AswathMarimuthu confirms that he was the first choice for #Thalaivar173😲:
“When I was writing for #STR51, at one point it stuck on a dead lock. So I worked on a different script. Then I got an opportunity for #Rajinikanth sir film through RKFI. While narration, at the Interval… pic.twitter.com/gmp1PC6AAW
— AmuthaBharathi (@CinemaWithAB) March 25, 2026
Also Read… பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் யூத் படம்… இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா?