சிம்பு குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் அசோக் செல்வன்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா

Actor Ashok Selvan: முன்னதாக நடிகர் சிம்பு குறித்து பல கருத்துகள் சினிமா வட்டாரங்களில் பரவி வந்த நிலையில் சமீப காலமாக அவர் குறித்து சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களும் தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன் புகழ்ந்து பேசியது வைரலாகி வருகின்றது.

சிம்பு குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் அசோக் செல்வன்... என்ன சொல்லி இருக்கார் தெரியுமா

நடிகர் அசோக் செல்வன்

Published: 

05 Jun 2025 11:40 AM

தமிழ் சினிமாவில் 3 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது 42 வயது வரை தன்னை சினிமாவில் நடிகராக நிலைநிறுத்தி உள்ளார் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவர் குறித்து நடிகர் அசோக் செல்வன் தக் லைஃப் பட விழாவில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் அசோக் செல்வன் பேசியது, சிம்பு அண்ணா… மை ப்ரதர். சிம்பு அண்ணாவை நேரில் சந்திப்பதற்கு முன்பு வரை நான் வேற என்னமோ நினச்சேன். ஆனா அவரை நேரில் சந்தித்த பிறகு அப்படியே என்னோட எண்ணம் மாறிவிட்டது. சிம்பு அண்ணா பத்தி தெரிஞ்சுக்கு தெரிஞ்சுக்க அவர இன்னும் அதிகம எனக்கு பிடிக்க ஆரம்பிக்குது. இந்தப் படத்தி அவர் எனக்காக நிறைய சொல்லிக்கொடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகராக பல விசயங்களை சொல்லிக்கொடுத்த சிம்பு அண்ணா:

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் நாங்க இருக்கும் போது என்ன கூப்பிட்டு இப்படி பன்னலாம். நீ அது பன்னா நல்லா இருக்கும் என்று நிறைய சொன்னார் சிம்பு அண்ணா. ஆனா அவர் அத சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை. ஆனா அவர் எனக்கு அத பன்னினார். நிஜமாவே அவர் எனக்கு ஒரு அண்ணனா இருக்கார். சிம்பு அண்ணா இந்தப் படத்திற்கு பிறகு நீங்க என்ன நினச்சாலும் அது உங்களுக்கு கிடைக்கும். இந்த தக் லைஃப் படம் ஒரு கேம் சேஞ்சரா உங்களுக்கு இருக்கும் என்றும் தெரிவிதுள்ளார்.

நடிகர் அசோக் செல்வனின் இன்ஸ்டா பதிவு:

தக் லைஃப் படத்தில் அசோக் செல்வன்:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக நடித்துள்ள படம் தக் லைஃப். இந்தப் படம் இன்று ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நாயகிகளாக நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் அபிராமி இருவரும் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர் என பலர் இந்தப் படத்தில் நடிதுள்ளனர். இந்தப் படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் அசோக் செல்வனை வெகுவாகப் பாராட்டி இருந்தார். அதில் அசோக் செல்வனைப் பார்க்கும் போது தான் சிறுவயதில் இருந்தது போல இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.