டிமாண்டி காலனி 3 பட ஷூட்டிங் ஓவர்.. திரில்லர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Demonte Colony 3 Shooting Wraps: தமிழ் பிரபல இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதியின் அதிரடி நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம்தான் டிமாண்டி காலனி 3. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளது.

டிமாண்டி காலனி 3 ஷூட்டிங் நிறைவு
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி, சிறப்பான வரவேற்பை பெற்ற திரில்லர் திரைப்படம்தான் டிமாண்டி காலனி (Demonte Colony). இந்த படத்தில் அருள்நிதி (Arulnithi) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு டிமாண்டி காலனி 2 (Demonte Colony 2) படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில், தயாராகியிருந்த நிலையில், மேலும் அதிக பயங்கரமான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அருள்நிதி ரெட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில், இதில் பிரியா பவனி சங்கர் (Priya Bhavani Shankar ), மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது டிமாண்டி காலனி 3 (Demonte Colony 3) படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது. அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 3ம் தேதியில், இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கிரைம் திரில்லர் கதையில்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா காளிதாஸ் 2 படம்? – விமர்சனங்கள் இதோ!
டிமாண்டி காலனி 3 படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் நிறைவு வீடியோ பதிவு:
It’s a wrap 🎬#DemontyColony3
The end is still far…🥶https://t.co/NxhFgcGrA2Arriving Summer 2026.@arulnithitamil @AjayGnanamuthu @Sudhans2017 @PassionStudios_ @DangalTV @gurusoms @RDCMediaPvtLtd@SamCSmusic @sivakvijayan @mugeshsharmaa @priya_Bshankar @Kumaresh_editor… pic.twitter.com/BFDZD4Wd4A
— Passion Studios (@PassionStudios_) April 3, 2026
இந்த டிமாண்டி காலனி 3 படமானது முற்றிலும் திரில்லர், மேலும் பல சுவாரஸ்யமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் தற்போது மிக முக்கிய வேடத்தில் நடிகர் குரு சோமசுந்தரம், மியா ஜார்ஜ், ஸ்ரீகுமார் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம், “லைபிரேரியன் அல்போன்ஸ் ஜெரால்ட்” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இவர்தான் அந்த டிமாண்டி புத்தகத்தை பலருக்கும் கொடுத்து, அந்த தீயசக்தியிடம் மாட்டிவிடுபவராக இருப்பவர்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்தது யூத் படம்
அந்த விதத்தில் தற்போது, டிமாண்டி காலனி 3 படமானது, கடந்த 2 பாகங்களை ஒப்பிடும்போது மேலும் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வரும் 2026 மே மாதத்தின் இறுதி அல்லது ஜூன் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.