குட் பேட் அக்லி படத்தில் வில்லனா நடிக்க ஒரே காரணம் இதுதான் – அர்ஜுன் தாஸ் சொன்ன சீக்ரெட்

Arjun Das: நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்து இருந்த நிலையில் படத்தில் நடிக்க ஒரே ஒரு காரணம் என்று அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குட் பேட் அக்லி படத்தில் வில்லனா நடிக்க ஒரே காரணம் இதுதான் - அர்ஜுன் தாஸ் சொன்ன சீக்ரெட்

அர்ஜுன் தாஸ்

Published: 

10 Sep 2025 07:30 AM

 IST

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். படத்தில் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) நடிப்பில் முன்னதாக வெளியான படங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற காட்சிகள் பலவற்றை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் ரீ கிரியேட் செய்து இருந்தது அஜித் குமாரின் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித் குமாரின் தீவிர ரசிகர் என்பதால் படத்தை அஜித்தின் ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி எடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப், ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ, தின்னு ஆனந்த், பி.எஸ். அவினாஷ், பிரியா பிரகாஷ் வாரியர், கார்த்திகேய தேவ், சாயாஜி ஷிண்டே, ரகு ராம், உஷா உதுப், ராகுல் தேவ், பிரதீப் கப்ரா, ஹாரி ஜோஷ், அஜித் நம்பியார், சிம்ரன், யோகி பாபு, டார்க்கி நாகராஜா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லியில் வில்லனா நடிச்சது அஜித் சார்காகதான்:

இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் கோலிவுட் சினிமாவில் வில்லன், ரொமாண்டிக் ஹீரோ என மாறிமாறி நடித்து வருகிறார். பொதுவாக வில்லனாக நடித்தவர்கள் ஹீரோவாக மாறியபிறகு மீண்டும் வில்லனாக நடிக்க தயக்கம் காட்டுவது வழக்கமான ஒன்று.

ஆனால் நடிகர் அர்ஜுன் தாஸ் தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்களின் முக்கியதுவத்தை உணர்ந்து நாயகன் வில்லை என எதையும் பார்க்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்ததற்கான காரணம் அஜித் சார் தான் என்றும் அவர் இந்தப் படத்தில் இருக்கிறார் என்பதால் அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே வில்லனாக நடித்ததாக அர்ஜுன் தாஸ் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் ஒன்னா நடிச்சப் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ

இணையத்தில் கவனம் பெறும் அர்ஜுன் தாஸ் பேசிய வீடியோ:

Also Read… ஆசை படத்திலேயே ’தல’யாக மாறிவிட்டார் அஜித் – இயக்குநர் வசந்த் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!