AR Murugadoss : விஜய்யின் துப்பாக்கியில் இருந்த ரிஸ்க்.. ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக்!

AR Murugadoss About Challenges Of Thuppakki Movie Making : இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் அவர் இயக்கி ஹிட் கொடுத்த படம் துப்பாக்கி. இப்படத்தை எடுக்கும்போது இருந்த ரிஸ்க் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

AR Murugadoss : விஜய்யின் துப்பாக்கியில் இருந்த ரிஸ்க்.. ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக்!

தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ்

Published: 

15 Aug 2025 19:25 PM

கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth முதல் ) தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை, உச்ச நடிகர்களை வைத்து படங்களை இயக்கியிருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரின் இயக்கத்தில் மட்டும் தளபதி விஜய் 3 படங்களில் நடித்திருக்கிறார். அந்த மூன்று படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸுடன் விஜய் இணைந்த முதல் படம்தான் துப்பாக்கி (Thuppakki). இப்படமானது கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இப்படத்தில் தளபதி விஜய் ராணுவ அதிகாரியாக நடித்து மக்களிடையே பிரபலமானார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) நடித்திருந்தார்.

இந்த படமானது விஜய்யின் நடிப்பில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இந்த படத்தை எடுக்கும்போது, ஏற்பட்டிருந்த ஆபத்துகள் குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், துப்பாக்கி படத்தை எடுக்கும்போது நிறைய ஆபத்துகளை எதிர்கொண்டதாக அவர் பேசியிருந்தார்.

இதையும் படிங்க : நிவின் பாலி மற்றும் நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ – வெளியானது டீசர்!

துப்பாக்கி திரைப்படத்தை பற்றி ஏ.ஆர். முருகதாஸ் பேசிய விஷயம்

அந்த நேர்காணலில் மதராஸி திரைப்படத்தைப் பற்றியும் துப்பாக்கி திரைப்படத்தைப் பற்றியும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியிருந்தார். அது அவர், “துப்பாக்கி திரைப்படத்தை எடுக்கும்போது, அன்றைய சூழ்நிலையில் மும்பையில் பயங்கரவாதம் குறித்து படம் எடுப்பது மிகவும் ரிஸ்க்கான விஷயமாகும். ஏனென்றால் அப்போது பயங்கரவாதம் என்பது நம்மது ஊரில் இல்லை, அது மும்பையில் இருந்தது. அதனால் மும்பையை மையக்கருவாக வைத்து அந்த படத்தை இயக்கியிருந்தேன்.

இதையும் படிங்க : மதராஸி படத்தின் கதை இதுதான்.. ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த விளக்கம்!

மேலும் மும்பையில் பயங்கரவாதம் குறித்து, ஒரு தமிழ் ஹீரோவை வைத்து எப்படி படமாக்குவது என்பதிலும் ஒரு ரிஸ்க் இருந்தது. ஏனென்றால் அவர் ஒருவர் மற்றும் அவரின் குடும்பம் மட்டும்தான் தமிழர்கள். மற்றபடி அவரை சுற்றி இருக்கும் அனைவரும் இந்தி நடிகர்கள். மேலும் தமிழகத்தில் அர்ஜுன் சார் மற்றும் விஜயகாந்த் சார் எல்லாரும் பண்ண விஷயம் . அதை மீண்டும் மும்பையில் வைத்து பண்ணும்போது அதிலும் ரிஸ்க் இருந்தது. மேலும் இது போன்று ரஜினிகாந்துடன் தர்பார் படம் பண்ணும்போதும் இருந்தது, அதிலும் ரஜினியை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் இந்தி நடிகர்கள் தான். இந்த இரு படங்களையும் நானும் ஒரே போலத்தான் டீல் பண்ணினேன்” என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியிருந்தார்.

மதராஸி திரைப்படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்ட பதிவு

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியாகக் கடத்திருக்கும் படம் மதராஸி. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.