ஏழாம் அறிவு படம் குறித்து விஜய் சொன்ன கமெண்ட்… கலகலப்பாக கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்!

Director AR Murugadoss: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அதன் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஏழாம் அறிவு படம் குறித்து விஜய் சொன்ன கமெண்ட்... கலகலப்பாக கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்!

ஏழாம் அறிவு

Published: 

17 Aug 2025 11:50 AM

இயக்குநர் ஏ.ஆர்.முருதாஸ் (Director AR Murugadoss) இயக்கத்தில் 6-வதாக வெளியான படம் ஏழாம் அறிவு. நடிகர் சூர்யா நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக தான் நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் படமாக வெளியான இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் ஜானி ட்ரீ நுயான், அபிநயா, இளவரசு, சுஜாதா, கின்னஸ் பக்ரு, ராமநாதன், தன்யா பாலகிருஷ்ணா, சாஹில் சிட்காரா, மீஷா கோஷல், அஸ்வின் கக்குமானு, அவினாஷ், ஊர்மிளா உன்னி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது. அதே போல படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏழாம் அறிவு படம் குறித்து விஜய் சொன்ன கமெண்ட்:

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். அதில் தான் தற்போது இயக்கி வெளியீட்டிற்காக காத்திருக்கும் மதராஸி படம் குறித்து பல அப்டேட்களை கொடுப்பது உடன் முன்னதாக இயக்கிய படங்கள் குறித்தும் அதில் இருக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

அந்த வகையில் ஏழாம் அறிவு படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து விஜய் சொன்ன கமெண்ட் என ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு விசயத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி ஏழாம் அறிவு படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சூர்யா அடையார் பாலத்தின் மீது யானையில் வருவது போன்ற காட்சி ஒன்றை வைத்து இருப்பார். அதனைப் பார்த்த விஜய் ஏங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க. அடையார் பிரிஜ் மேல யானையில வருகிற மாதிரிலாம் எடுத்து இருக்கீங்க என்று கேட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் கலகலப்பாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Cinema Rewind: ஒரு சீனுக்காக 2 நாட்கள் பயிற்சி.. நடிகர் விஜய் பகிர்ந்த தகவல்!

இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோ:

Also Read… Rajinikanth : ஜிம் ஒர்கவுட்டில் மிரட்டும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ