Kathanar: ஹாலிவுட் பட தரத்தில்.. வெளியானது அனுஷ்காவின் ‘கத்தனார்’ படத்தின் ட்ரெய்லர்!

Kathanar Movie Trailer: மலையாள இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கத்தில் அனுஷ்கா மற்றும் ஜெயா சூர்யா இணைந்து நடித்துள்ள படம்தான் கத்தனார். இந்த படமானது பேண்டஸி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இதன் அதிரடி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Kathanar: ஹாலிவுட் பட தரத்தில்.. வெளியானது அனுஷ்காவின் கத்தனார் படத்தின் ட்ரெய்லர்!

கத்தனார் திரைப்பட ட்ரெய்லர்

Updated On: 

31 Mar 2026 16:37 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty). இவர் கதாநாயகியாக மலையாள சினிமாவில் நடித்துள்ள திரைப்படம்தான் கத்தனார்: தி வைல்ட் சோர்சரர் (Kathanar – The Wild Sorcerer). இந்த படத்தின் மூலமாகத்தான் நடிகை அனுஷ்கா மலையாளத்தில் நடிகையக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மலையாள இயக்குநர் ரோஜின் தாமஸ் (Rojin Tomas) இயக்கியுள்ள நிலையில், அனுஷ்கா ஷெட்டி, ஜெய சூரியா (Jaya Surya) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் பேண்டஸி கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இது கடமட்டத்து கத்தனார் என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள பேண்டஸி படமாகும். இப்படத்தில் அனுஷ்கா நீலி (Neeli) என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்க, கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார். அந்த விதத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற நிலையில், தற்போது படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரானது தற்போது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தை இறுதி படமாக அறிவித்தது ஏன்? ஷாமிடம் விஜய் சொன்ன விஷயம்!

நடிகை அனுஷ்கா ஷெட்டி வெளியிட்ட கத்தனார் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த பதிவு:

இந்த ட்ரெய்லரில், நடிகர் ஜெய சூர்யா ஹீரோவாக நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படம் கேரளாவில் நடக்கும் ஒரு கதையை மையமாக கொண்டு நடக்கிறது. முற்றியிலும் பேண்டஸி மேஜிக் திரைப்படமாக இந்த படம் தயாராகியுள்ளது. இப்படம் ரெட்ரோ காலத்தில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. ஒரு ஆபத்து காலத்தில் உருவெடுக்கும் கத்தனார் என்ற சக்திமிகுந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நீலியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: படத்துக்காக விஜய் ரசிகர்-னு சொன்னேனா.. விஜய் சார் ரசிகனாக காரணம் இதுதான் – அட்லீ ஓபன் டாக்!

மேலும் இப்படத்தில் நடிகர் பிரபுதேவா, சாண்டி மாஸ்டர், வினீத் போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் பேண்டஸி கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், ரிலீஸ் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் ஹாலிவுட் பட ரேஞ்சில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..