ரசிகர்களுக்கு மட்டுமில்லை எனக்கும் அந்த கதாப்பாத்திரம் பிடிக்கவில்லை – நடிகை அனுபமா பரமேசுவரன்

Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேசுவரன் சமீபத்தில் தில்லி ஸ்கொயர் படத்தில் தான் நடித்தது குறித்து பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் மிகவும் கவர்ச்சியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு மட்டுமில்லை எனக்கும் அந்த கதாப்பாத்திரம் பிடிக்கவில்லை - நடிகை அனுபமா பரமேசுவரன்

அனுபமா பரமேசுவரன்

Published: 

14 Aug 2025 07:42 AM

மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை அனுபமா பரமேசுவரன் (Actress Anupama Parameswaran). அதனைத் தொடர்ந்து மலையாள சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இறுதியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான ஜானகி வி VS  ஸ்டேட் ஆஃப் கேராளா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகரும் அமைச்சருமான சுரேஷ் கோபி நாயகனாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் வெளியாக உள்ள படம் பர்தா.

சோசியல் ட்ராமாவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் உடன் இணைந்து நடிகர்கள் தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனந்த மீடியா பேனரின் கீழ் தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாசுலு பி.வி., விஜய் டோங்கடா மற்றும் ஸ்ரீதர் மக்குவா ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேசுவரன் சமீபத்தில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

தில்லு ஸ்கொயர் படத்தில் நடிக்கும்போது அசவுகரியமாக உணர்ந்தேன்:

தொடர்ந்து ஹோம்லி லுக்கில் நடித்து வந்த நடிகை அனுபமா பரமேசுவரன் கடந்த 2024-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான தில்லு ஸ்கொயர் படத்தில் சற்று கவர்ச்சி கூடுதலாக நடித்து இருந்தார். இவரை ஹோம்லி லுக்கிலேயே தொடர்ந்து பார்த்த ரசிகர்களுக்கு அந்த கவர்ச்சி கதாப்பாத்திரம் பிடிக்கவில்லை. இதனால் படம் வெளியான போது அனுபமா பரமேசுவரன் பல விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடையே பேசிய நடிகை அனுபமா பரமேசுவரன் தனுக்கு தில்லுக்கு ஸ்கொயர் படத்தில் நடித்தபோது அசவுகரியமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்தது தவறில்லை. ஆனால் நான் அப்படி நடித்து இருக்க கூடாது என்றும் நடிகை அனுபமா பரமேசுவரன் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Also Read… கூலி படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

நடிகை அனுபமா பரமேசுவரன் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… கூலி படத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்க நீங்கதான் காரணம் தலைவரே – ரஜினிகாந்த் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி