Coolie : லோகேஷ் கனகராஜ் எந்த படம் பண்ணாலும்… அனிருத் அதிரடி!

Anirudh Ravichander About Lokesh Kanagaraj : பான் இந்தியத் திரைப்படமாக ரிலீசிற்கு தயாராகிவரும் படம் கூலி. ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் இப்படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தில் லோகேஷின் கதைக்களம் குறித்து, இசையமைப்பாளர் அனிருத் பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Coolie :  லோகேஷ் கனகராஜ் எந்த படம் பண்ணாலும்... அனிருத் அதிரடி!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

01 Aug 2025 22:55 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் முதல் தளபதி விஜய் (Thalapathy vijay) வரை பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் (Rajinikanth) இவர் இணைந்திருக்கும் திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், ஆமிர்கான் (Aamir Khan) , நாகார்ஜுனா, சௌபின் சாஹிர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை கோலிவுட் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், கூலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் கூலி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜின் கைவண்ணம் குறித்துப் பேசியுள்ளார். அவர் அந்த நேர்காணலில், லோகேஷ் கனகராஜ், பல லெஜெண்டுகளை வைத்து நல்ல திரைப்படங்களைக் கொடுத்துள்ளார் என்று அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : தர்ஷனின் ‘ஹவுஸ்மேட்ஸ்’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

லோகேஷ் கனகராஜ் குறித்து அனிருத் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இசையமைப்பாளர் அனிருத், கூலி திரைப்படத்தைப் பற்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது  பேசிய அவர் லோகேஷ் கனகராஜின் இயக்கம் குறித்தும் பேசியிருந்தார். அதில் அவர், “கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஹைப் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் தலைவர் மற்றும் லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக இணையும் படம் இது. மேலும் நானும் , லோகேஷ் கனகராஜும் எந்த படம் பண்ணாலும், அந்த படத்தின் பாடல்கள் நிச்சயமாக வரவேற்பை பெரும். மேலும் இந்த கூலி படத்தைப் போல நட்சத்திர நடிகர்களின் கூட்டமைப்பு வேறு இந்தப் படங்களிலும் அமையாது. அதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகம்.

இதையும் படிங்க : மாபெரும் வெற்றி.. ‘தலைவன் தலைவி’ வசூல் நிலவரம் இதோ!

அனிருத் பாடல் பாடிய வீடியோ :

மேலும் லோகேஷ் கனகராஜின் கைவண்ணம் இப்படத்தில் அருமையாக அமைந்திருக்கிறது. அனைத்து லெஜெண்ட் நடிகர்களுடனும் லோகேஷின் திரைக்கதை மிகவும் அழகாக வந்துள்ளது” என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியிருந்தார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த கூலி படத்துடன் பாலிவுட் படமான வார் 2 படம் மோதும் நிலையில், ஒட்டுமொத்தமாகக் கூலி படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் வெளியாகக் காத்திருக்கிறது.