தனுஷ் 55 படத்தில் நாயகி யார் தெரியுமா? இன்று மாலை வெளியாகும் அதிகாரப்பூர்வ அப்டேட்

Dhanush 55 Movie Heroine Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தனுஷ் 55. இந்தப் படம் தொடர்பான படேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷ் 55 படத்தில் நாயகி யார் தெரியுமா? இன்று மாலை வெளியாகும் அதிகாரப்பூர்வ அப்டேட்

தனுஷ் 55

Published: 

31 Jan 2026 12:25 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தி சினிமாவில் பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராய் எழுதி இயக்கிய இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா உடன் தனது 54-வது படத்திற்காக கூட்டணி வைத்தார். கர என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது படம் குறித்த அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தினை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷின் 55 படத்தின் நாயகி யார்?

இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன்படி இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை படத்தில் நடிக்கும் நாயகி குறித்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் பெண்கள் அணியும் ஜெயின் ஒன்று இருக்கிறது. அதில் எஸ் என்ற எழுத்தும் உள்ளது. இதன் காரணமாக முன்னதாக சினிமா வட்டாரங்களில் நடிகை சாய் பல்லவி தான் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவராக இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தெரியவரும்.

Also Read… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் மீண்டும் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… STR ஃபேன்… இணையத்தில் வைரலாகும் பூக்கி படத்தின் 2-வது புரோமோ வீடியோ

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ