Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரத்து? – படத்தின் நிலைமை இதுதான்!

Jana Nayagan OTT Rights canceled: தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் 69வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் ஜன நாயகன். இப்படமானது தொடர்ந்து பல சிக்கலை சந்தித்துவரும் நிலையில், இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமை ரத்து செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரத்து? - படத்தின் நிலைமை இதுதான்!

ஜன நாயகன் திரைப்படம்

Updated On: 

12 Mar 2026 15:51 PM

 IST

இயக்குநர் எச்.வினோத் (H. Vinoth) இயக்கத்தில் மற்றும் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தயாராகியிருத்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான விஜய் (Vijay) கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முற்றிலும் அரசியல், பெண் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முறையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், சென்சார் விவகாரம் தொடர்பாக இன்னும் வெளியாகவில்லை. தொடர்ந்து மறுஆய்வு குழுவிற்கு இப்படம் அனுப்பப்பட்டிருந்த நிலையிலும், இன்னும் சென்சார் கிடைக்கவில்லை.

இந்த பிரச்சனையே தொடர்ந்து படக்குழுவினரையும், விஜய் ரசிகர்களையும் மன வருத்தத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் (Amazon Prime) ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரத்து செய்யப்படவில்லை என்றும் சில தகவல்களும் வெளியாகிவருகிறது. இதில் எது உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க : அப்படி செய்தால் மட்டுமே தயாரிப்பாளரின் பணம் மிச்சமாகும்… தாய் கிழவி சக்சஸ் மீட்டில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்!

ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை ரத்து:

தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமானது பெற்றிருந்தது. இந்நிறுவனம் கிட்டத்தட்ட ரூ 120 கோடிகளுக்கு மேல் படம் கொடுத்து, இதன் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகின்ற நிலையில், தற்போது இதன் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலக அளவில் ரீ ரிலீஸாகும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் – எப்போது தெரியுமா?

ஜன நாயகன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த ஜன நாயகன் படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியிலே வெளியாகவேண்டியது. ஆனால் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கடந்தும் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னும் ரிவைசிங் கமிட்டி இப்படத்தை பார்வையிடாத நிலையில், இப்படத்தை அவர்கள் பார்வையிட்டு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பிறகே சென்சார் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகே ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..