உலக புகழ்பெற்ற வைரல் டான்ஸை ஆடிய அஜித் மகன் ஆத்விக்… வைரலாகும் வீடியோ

Ajith Kumar son Aadvik: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மகன் ஆத்விக் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

உலக புகழ்பெற்ற வைரல் டான்ஸை ஆடிய அஜித் மகன் ஆத்விக்... வைரலாகும் வீடியோ

ஆத்விக் அஜித்

Published: 

20 Dec 2025 13:31 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். சினிமாவில் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் நடிக்க வந்த நடிகர் அஜித் குமார் தனது கடின உழைப்பின் காரணமாக தற்போது சினிமாவில் தனக்கு என்று ஒரு அசைக்க முடியாக இடத்தை பிடித்துள்ளார். இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே தன் உடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சினிமாவில் காதலித்து திருமணம் செய்தவர்கள் பலர் இருந்தாலும் தங்களது காதலை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக காட்டி வாழும் ஜோடிகள் மிகக் குறைவு. அப்படி சினிமா உலகிலும் ரசிகர்களுக்கும் ஒரு சிறந்த தம்பதிகளாக எடுத்துக்காட்டும் நபர்களாக உள்ளார்கள் நடிகர்கள் அஜித் குமார்- ஷாலினி. இவர்களை தங்களது ஃபேவரட் ஜோடிகளாக வைத்துள்ளனர் ரசிகர்கள்.

சமூக வலைதளங்கள் எதிலும் இல்லாத நடிகர் அஜித் குமார் தொடர்பான தகவல்கள் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித் குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கணக்கை தொடங்கினார். அதில் தனது குடும்பம் தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இது ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் ஷாலினி தனது குழந்தைகள் தொடர்பான பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். அதில் குறிப்பாக அவரது மகன் ஆத்விக் அஜித் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

உலக புகழ்பெற்ற வைரல் டான்ஸை ஆடிய அஜித் மகன் ஆத்விக்:

நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் மாஸ் காட்டி வரும் நிலையில் அவரது மகன் ஆத்விக் அஜித் ஃபுட்பால் ப்ளேயராக தொடர்ந்து தனது பள்ளி சார்பாக பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது உலக புகழ் பெற்றா ஆரா ஃபார்மிங் டான்ஸை ஆத்விக் அஜித் ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… துல்கர் சல்மானின் ஐம் கேம் படத்தில் இணைந்த நடிகை கயடு லோஹர்

இணையத்தில் வைரலாகும் ஆத்விக் அஜித் டான்ஸ் வீடியோ:

Also Read… நடிகை நிதி அகர்வாலிடம் கூட்டத்தில் அத்துமீரிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்