Ajith Kumar: மங்காத்தாடா… அஜித் குமாரின் மங்காத்தா படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

Mankatha Re-release: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் அஜித்தின் நடிப்பில் 15 வருடத்திற்கு முன் வெளியான படம் மங்காத்தா. தற்போது இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith Kumar: மங்காத்தாடா... அஜித் குமாரின் மங்காத்தா படத்தின் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

மங்காத்தா

Published: 

04 Jan 2026 14:58 PM

 IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran) இயக்க, அஜித் குமார், திரிஷா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் அஜித் குமாருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து சூப்பர் ஹிட் திரைப்படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இவர் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு, கார் ரேஸ் போட்டியில் களமிறங்கினார். இந்நிலையில் சமீப காலமாக இவரின் மங்காத்தா (Mankatha) படம் ரீ-ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இதன் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபு (Vengkat Prabhu) இயக்கத்தில் அஜித் குமாரின் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டில் மங்காத்தா படமானது வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி 15 வருடத்தை கடந்த நிலையில், வரும் 2025 ஜனவரி 23ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: எந்த கட்சியையும் சார்ந்து பிளான் பண்ணி பண்ண படம் இது இல்லை – சிவகார்த்திகேயன் பேச்சு!

சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்ட மங்காத்தா பட ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு :

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், மங்காத்தா படத்தில் அஜித் குமார் திரிஷா, அர்ஜுன், லட்சுமி ராய், வைபவ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் விநியோகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டில் வெளியான அஜித் குமாரின்  மங்காத்தா படமானது மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்ததது. வெறும் ரூ 24 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.

இதையும் படிங்க: மலேசிய கார் ரேஸ் ஓவர்.. நண்பர்களுடன் கெட்-டூ-கெதர் பார்ட்டியில் அஜித் குமார்!

அந்த படமானது தற்போது 15 வருடத்திற்கு பின் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த படமானது வரும் 2026 ஜனவரி 23ம் தேதியில் உலகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் அறிவிப்பு இன்று 2026 ஜனவரி 4ம் தேதியில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் அஜித்தின் அட்டகாசம் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த மங்காத்தா படமும் சூப்பர் ஹிட் வெற்றியை பெரும் என கூறப்படுகிறது.

குங்குமம் இல்லாததால் தடைபட்ட திருமனம்... - சில நிமிடங்களில் டெலிவரி செய்த பிளிங்கிட் டெலிவரி உழியர்
அமேசான் காடுகளில் இருக்கும் கொட்டாத தேனீக்கள்.. ஏன் இது முக்கியத்துவம் வாய்த்ததாக உள்ளது?
போர்ச்சுகலில் ஹனிமூன் கொண்டாடும் சமந்தா – ராஜ் நிதிமோறு..
வ்ருஷபா படத்தின் 7 நாள் கலக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?