அஜித்துடன் ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, அனிருத்… – வைரலாகும் போட்டோ – பின்னணி என்ன?
Ajith Kumar : நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது கார் ரேஸிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன், அனிருத் ஆகிய கோலிவுட் திரைப்பட இயக்குநர்களுடன், 33 ஆண்டுகள் திரையுலக பயணம் மற்றும் நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார்.

அஜித் குமார் மற்றும் தமிழ் இயக்குநர்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றியிருக்கிறது. இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் 2 படங்கள் வெளியாகியிருந்தது. அதில் விடாமுயற்சி (Vidaamuyarchi) படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையில், அதையெல்லாம் தகர்க்கும் விதத்தில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படமானது வரவேற்பைப் பெற்றிருந்தது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் இப்படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படம் மொத்தம் சுமார் ரூ 232 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதை அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணியில், AK64 படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், தற்போது அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று 2025, ஆகஸ்ட் 3ம் தேதியில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, கோலிவுட் இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : சினிமாவில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித் குமார் – வைரலாகும் ஆதிக் ரவிச்சந்திரனின் எக்ஸ் தள பதிவு!
சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் பதிவு
Friends are not time bound. Yesterday , today, tomorrow and the eternal. Happy friendship day.@directorsiva @ARMurugadoss @Adhikaravi @anirudhofficial @itsmanuanand #FriendshipDay2025 pic.twitter.com/HMvwVUG49A
— Suresh Chandra (@SureshChandraa) August 3, 2025
இந்த புகைப்படத்தில் இயக்குநர்கள் சிறுத்தை சிவா, ஏ.ஆர். முருகதாஸ், ஆதிக் ரவிச்சந்திரன், மனு ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் என பல பிரபலங்களும் இந்த புகைப்படத்தில் உள்ளனர். இவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, நண்பர்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், “நண்பர்கள் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நேற்று, இன்று, நாளை நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்” என அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார். தற்போது நடிகர் அஜித் குமார் இருக்கும் இப்படமானது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ!
அஜித் குமாரின் புதிய படம் :
நடிகர் அஜித் குமாரி 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான இயக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் உறுதியாக தெரிகிறது. மேலும் இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், அறிவிப்புகளை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.