விறுவிறுப்பாக நடைபெறும் AK64 படத்தின் பணிகள் – வைரலாகும் போட்டோ!

Ajith Kumar 64 Movie: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இரண்டாவது முறையாக இந்த கூட்டணி உருவாக உள்ள நிலையில் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெறும் AK64 படத்தின் பணிகள் - வைரலாகும் போட்டோ!

அஜித் குமார் உடன் ஆதிக் ரவிச்சந்திரன்

Published: 

27 Sep 2025 17:33 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இரண்டு படத்திலுமே நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தனது கார் ரேஸ் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

கார் ரேஸ் மற்றும் நடிப்பு என இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து வரும் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகர் அஜித்தை மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார் என்ற தகவல் வெளியானது. அஜித் குமாரின் தீவிர ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இறுதியாக அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெறும் AK64 படத்தின் பணிகள்:

நடிகர் அஜித் குமார் தற்போது அவரது கார் ரேஸ் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கார் ரேஸ் பணிகளுக்கு இடையே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்துள்ளார். இது அவரது 64-வது படத்தின் பணிகளுக்காகதான் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் நடிகர் அஜித் குமாரின் 64-வது படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போனு தெரியுமா? வைரலாகும் தேதி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வின்னர் படம் இப்படிதான் உருவாச்சு – சுந்தர் சி சொன்ன சுவாரஸ்ய கதை