பைசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வைரலாகும் துருவ் விக்ரமின் அடுத்த படத்தின் அப்டேட்!

Dhruv Virkam New Movie Update: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பைசன் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பைசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வைரலாகும் துருவ் விக்ரமின் அடுத்த படத்தின் அப்டேட்!

துருவ் விக்ரம்

Published: 

16 Feb 2026 15:18 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விக்ரமின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் துருவ் விக்ரம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து மகான் மற்றும் பைசன் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் மகான் படத்தில் நடிகர் விக்ரம் தான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படத்திலும் அவரது மகனாகவே நடிகர் துருவ் விக்ரம் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன். இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் துருவ் விக்ரமின் அடுத்த படத்தின் அப்டேட்:

இந்த நிலையில் பைசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம் அடுத்ததாக எந்தப் படத்தில் யாருடன் கூட்டணி வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சினிமா வட்டாரத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கத்தில் ஒரு ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அந்தப் படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… எத்தனை வருடங்கள் ஆச்சு… இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் க்ளீன் ஷேவ் போட்டோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சில நேரங்களில் சரியான முடிவு எடுக்க இன்னும் சிறிது நேரம் எடுக்கும்… தாய் கிழவி படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த படக்குழு!

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?