Cinema Rewind : நயன்தாராவிற்கு அது கூட செய்யத் தெரியாது.. நடிகை சரண்யா பொன்வண்ணன் உடைத்த உண்மை!
Saranya Ponvannan : கோலிவுட்டில் ஹீரோயினாகப் பிரபலமானதை விட நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். மணிரத்னத்தின் நாயகன் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்நிலையில் இவர் முன்னதாக நடிகை நயன்தாராவைப் பற்றிக் கூறிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது, அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan) திரைப்படங்களில் நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதை விட, நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் (mother role ) நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். பொதுவாகத் தமிழ்ப் படங்களில் அம்மா ரோல் என்றாலே நம் நினைவிற்கு வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளராக (fashion designer) இருந்து வருகிறார். அதற்காக மற்றவர்களுக்கும் பயிற்சியும் கொடுத்தது வருகிறார். இவர் 1987ல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் (Nayakan) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு (Kamal Haasan) ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் மனசுக்குள் மத்தாப்பு , என் ஜீவன் பாடுது, மேளம் கொட்டு டாலி கட்டு மற்றும் சிகப்பு தாலி போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். பின் இவர் 1995 ஆண்டு பிரபல நடிகரான பொன்வண்ணன் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு முழுவதுமாக குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். அதைத் தொடர்ந்து பின்னும் சினிமாவில் முக்கிய வேடத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் இவர் முன்னதாக ஒரு நேர்காணலில் நடிகை நயன்தாராவின் (Nayanthara) கேரக்டர் பற்றிச் சொன்ன விஷயம் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
நயன்தாராவை பற்றி நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகை சரண்யா பொன்வண்ணம், “நடிகை நயன்தாரா யாரிடமாவது பேசாமல் இருந்தால் அவர் மிகவும் மோசமான நபராகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் நயன்தாரா மிகவும் சாதுவானவர் மற்றும் உண்மையான நபரும் கூட, அவருக்கு, அவரை எதிர்க்கும் நபரைக் கூட எப்படி சமாளிக்க வேண்டும் என்று கூடத்தெரியாது. அந்த அளவிற்குப் பிரச்சனையைக் கண்டால் பத்து அடி தள்ளி போயிருவாங்க. இந்த விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சிரியமாக இருந்தது. தமிழ் சினிமாவில் பெரிய இடத்தில் இருக்கும் நடிகை இந்த மாதிரி இருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.
நடிகை நயன்தாரா எவ்வளவு கெத்தா, அதிகாரத்துடன் இருக்கவேண்டும் ஆனால் அவங்க அப்படி கிடையாது. மிகவும் அமைதியான நடிகை என்று நடிகை சரண்யா பொன்வண்ண நடிகை நயன்தாராவைப் புகழ்ந்திருப்பார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படிதான் இருப்பார்” என்றும் கூறி வருகின்றனர்