குஜராத் மாநிலம் சூரத் நகரில், ஒரு குடும்பத்தினர் வீட்டில் பூஜை செய்த பிறகு, காய்ந்த பூக்கள் மற்றும் இதர பூஜை பொருட்களை ஆற்றில் கரைக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக, பூஜை பொருட்களுடன் சேர்த்து 2 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்த பையையும் ஆற்றில் வீசிவிட்டனர். வீட்டில் பூஜை முடிந்ததும், பூஜை பொருட்கள் பீரோவிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்தன.