Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sanjana Krishnamoorthy : இது அமையும் என்று எதிர்பார்க்கல… ‘தக் லைஃப்’ படம் குறித்து லப்பர் பந்து நடிகை நெகிழ்ச்சி!

Sanjana Krishnamoorthy About Thug Life Movie : தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக அறிமுகமாகி, தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சஞ்சனா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் லப்பர் பந்து. இதைத் தொடர்ந்து மணி ரத்னத்தின் தக் லைப் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்ததை குறித்து நடிகை சஞ்சனா ஓபனாக பேசியுள்ளார்.

Sanjana Krishnamoorthy : இது அமையும் என்று எதிர்பார்க்கல… ‘தக் லைஃப்’ படம் குறித்து லப்பர் பந்து நடிகை நெகிழ்ச்சி!
நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்திImage Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 17 May 2025 18:13 PM

கோலிவுட் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் லப்பர் பந்து (Lubber Panthu) . இந்த படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் என இரு நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில்தான் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy)  லீட் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் இந்த படத்திற்கு முன் வதந்தி என்ற வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து  இந்த  படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணிபுரியத் தொடங்கிய இவர், லப்பர் பந்து படத்தின் மூலம் கதாநாயகியானார்.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam)  இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் (Thug Life)  படத்தில், நடிகர் கமல்ஹாசனின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட கதைகளத்ததுடன் ரிலீசிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்குக் காரணம் பற்றியும், படத்தில் நடித்ததைப் பற்றியும் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேசிய விஷயம்

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, “இந்த படத்தில் நடித்தற்கான காரணம் மற்றும் நடித்த அனுபவம் பற்றிக் கூறியுள்ளார். அவர் அந்த நிகழ்ச்சியில், நான் தக் லைஃப் படத்திற்கான ஆட்டிசன் நடந்தது, நானும் அதில் கலந்துகொண்டேன். ஆனால் இது அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நான் உதவி இயக்குநராகத்தான் இந்த படத்திற்கு வந்தேன். ஆனால் இந்த படத்தில் அதுவும் மணிரத்னம் சார் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறேன், இந்த விஷயம் எனக்கும் மேஜிக்கை போலத்தான் இருக்கிறது.

பொதுவாக மணிரத்னம் சாரை பற்றி சினிமாவில் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. ஆனால் எனக்குக் கிடைத்திருக்கிறது, நான் தக் லைஃப் படத்தில் எல்லா நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறேன் மற்றும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறேன்” என்று நடிகை சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி கூறியுள்ளார்.

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ :

நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் இந்த தக் லைப் படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூரில் உங்களுக்குத் தெரியாத 7 சாகச விளையாட்டுகள் பற்றி இதோ..!
மைசூரில் உங்களுக்குத் தெரியாத 7 சாகச விளையாட்டுகள் பற்றி இதோ..!...
ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இத டிரை பண்ணுங்க!
ஸ்மார்ட்போன் பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இத டிரை பண்ணுங்க!...
மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்..!
மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்..!...
கமலின் தக் லைஃப் பட டிரெய்லரில் மிகப்பெரிய டிவிஸ்ட்!
கமலின் தக் லைஃப் பட டிரெய்லரில் மிகப்பெரிய டிவிஸ்ட்!...
இது நடந்தால் நான் இந்தியா வருவேன்! விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி!
இது நடந்தால் நான் இந்தியா வருவேன்! விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி!...
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: தலைகீழாக கவிழ்ந்த காருக்குள் இருந்த பேபி
சாலையில் ஏற்பட்ட பள்ளம்: தலைகீழாக கவிழ்ந்த காருக்குள் இருந்த பேபி...
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை..!
சிகரெட் வாங்கித்தர மறுத்த மென்பொருள் ஊழியர் கொலை..!...
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!
ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பா..? இந்தியா ஏ அணியில் இல்லாத இடம்..!...
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயைத் தடுக்க 9 எளிய நிவாரண வழிகள்!
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயைத் தடுக்க 9 எளிய நிவாரண வழிகள்!...
ராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை யார் தெரியுமா?
ராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை யார் தெரியுமா?...
பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் பகிர்ந்த யூடியூபர்? அதிரடி கைது
பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் பகிர்ந்த யூடியூபர்? அதிரடி கைது...