வல்லவன் படம் ரிலீஸானப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன் – நடிகை சந்தியா!

Actress Sandhya: காதல் சந்தியா என தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் பலப் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் வல்லவ்ன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சந்தியா பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

வல்லவன் படம் ரிலீஸானப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன் - நடிகை சந்தியா!

சந்தியா மற்றும் சிம்பு

Published: 

22 Aug 2025 22:06 PM

கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் (Balaji Sakthivel) இயக்கத்தில் வெளியான படம் காதல். இந்தப் படத்தில் நடிகர் பரத் நாயகனாகவும் நடிகை சந்தியா நாயகியாகவும் நடித்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனதால் இவரை காதல் சந்தியா என்றும் ரசிகர்கள் அனுபுடன் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து நடிகை சந்தியா நடிப்பில் வெளியான டிஸ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில், மகேஷ் சரண்யா மற்றும் பலர், மஞ்சல் வெயில், ஓடிப்போலாம, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், யா யா, சூதாட்டம், துணை முதல்வர், கத்துக்குட்டி, ருத்ராவதி என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதில் இவர் இறுதியாக 2015-ம் ஆண்டுதான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிகை சந்தியா நடித்துள்ளார். இவரது நடிப்பை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படங்களில் தொடர்ந்து சந்தியா நடிக்கவில்லை என்றும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

வல்லவன் படத்தில் நடித்தது மன வருத்தத்தை ஏற்படுத்தியது:

இந்த நிலையில் முன்னதாக நடிகை சந்தியா அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் வல்லவன் படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையா பேசியுள்ளார். அதில் சிம்புவுடன் நடித்த வல்லவன் படத்தில் நடிப்பதற்கு முன்பு எனக்கு சொன்ன கதை வேறு ஆனால் படத்தின் படப்பிடிப்பில் அவர்கள் எடுத்தது வேறு.

அந்தப் படம் வெளியான போது எனக்கு மிகுந்த மன வருத்தமாக இருந்தது என்று நடிகை சந்திய அனதப் பேட்டியில் வெளிப்படையாக பேசினார். இது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் அவர் எப்போது படத்தில் நடிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… நடிகர் கார்த்தி மீது எனக்கு அப்போ மரியாதை வந்தது… தனுஷ் சொன்ன சம்பவம்!

வல்லவன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ:

Also Read… பரியேறும் பெருமாள் படத்தை மிஸ்பன்னத நினைத்து வருத்தப்பட்டேன் – நடிகை அனுபமா பரமேசுவரன்