பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை பூஜா ஹெக்டே

Actress Pooja Hegde: தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழில் நடிகர் விஜயின் கடைசிப் படமான ஜன நாயகன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

Published: 

02 Jun 2025 15:38 PM

 IST

நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde) தற்போது சினிமாவில் வெற்றி முகத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ படம். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். ரெட்ரோ படத்தில் நடிகர் சூர்யாவின் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். நடித்தார் என்று சொல்வதை விட அந்தப் படத்தில் ருக்மணி என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தார். பாந்தமான அவரது நடிப்பில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவின் தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன பூஜா ஹெக்டே:

இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் முகமூடி. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தான் இவர் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதன்முறையாக வெளியான சூப்பர் ஹீரோ படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தென்னிந்திய மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வந்த பூஜா ஹெக்டே:

தமிழ் சினிமாவில் நாயகியாக பூஜா ஹெக்டே அறிமுகம் ஆகி இருந்தாலும் அவர் அதிக அளவில் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. மாறாக தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலேயே அதிகமான படங்களில் நடித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. 2012-ம் ஆண்டு முகமூடி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ம் ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தில் நடித்தார்.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகை பூஜா ஹெக்டேவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விஜயுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டா பதிவு:

பாக்ஸ் ஆபிஸ் குறித்து பேசிய நடிகை பூஜா ஹெக்டே:

சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த நடிகை பூஜா ஹெக்டே, நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். நான் ஒரு நல்ல நடிகை என்று சொல்ல வைக்கும் கதைகளிலேயே நான் நடிக்க ஆசைப்படுகிறேன். தொடர்ந்து 6 ஹிட் படங்களை கொடுத்துள்ளேன். அதை நான் முழுவதுமாக சந்தோசமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

ஏன் என்றால் தோல்வி ஏற்படும் போதும் அதை ஏற்றுக்கொள்ள என் மனம் தயாராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பாக்ஸ் ஆபிஸ் குறித்து பேசிய நடிகை பூஜா ஹெக்டே தொடர்ந்து தான் மாஸ் மசலா படங்களையே செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..