ரத்தானதா நிவேதா பெத்துராஜினின் திருமணம்… என்ன நடந்தது?
Actress Nivetha Pethuraj: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்போது திருமணம் நிச்சயம் ரத்தானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காதலருடன் நிவேதா பெத்துராஜ்
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஒரு நாள் கூத்து. இந்த ஒரு நாள் கூத்து படத்தில் நடிகர்கள் பலர் நடித்து இருந்தனர். இதில் நடிகை நிவேதா பெத்துராஜ் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகையான முதல் படத்திலேயே இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்த நிலையில் நடிகர்கள் தினேஷ் மற்றும் நிவேதா பெத்துராஜிற்கு ஒரு பாடல் இருக்கும். அதன்படி அந்த ”அடியே அழகே” பாடல் தான் நிவேதா பெத்துராஜை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பிரபலம் ஆக்கியது என்பது நிதர்சனமான உண்மை.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. அதன்படி இவரது நடிப்பில் அடுத்தடுத்து பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபிடிச்சவன், சங்கதமிழன், பொன்மாணிக்கவேல் என அடுத்தடுத்து தமிழில் இவரது நடிப்பில் படங்கள் வெளியானது. இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக 2023-ம் ஆண்டே படம் வெளியான நிலையில் தற்போது இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தானதா நிவேதா பெத்துராஜினின் திருமணம்?
இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் துபாயில் செட்டில் ஆன நிலையில் அங்கு உள்ள ஒரு தொழிலதிபரை காதலிப்பதாக ராஜித் இப்ரான் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் ராஜித் இப்ரானை மட்டுமே இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்துவந்தார்.
இப்படி இருந்த நிலையில் தற்போது தனது காதலுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் ராஜித் இப்ரானை இன்ஸ்டாகிராம் ஃபாலோ செய்வதையும் நடிகை நிவேதா பெத்துராஜ் நிறுத்தியுள்ளார். இதனால் இவர்களின் திருமணம் ரத்தானதாக சினிமாவா வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றது.
Also Read… வழக்காடு மன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு… வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள்
நடிகை நிவேதா பெத்துராஜின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… மீண்டும் தள்ளிப்போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்? வைரலாகும் தகவல்