நடிகைகள் குறித்து அப்படி நினைப்பது சரியில்லை – நடிகை நித்யா மேனன் ஓபன் டாக்

Actress Nithya Menon: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக வரிசைக் கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகைகள் குறித்த சில தவறான எண்ணங்கள் குறித்து நித்யா மேனன் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகைகள் குறித்து அப்படி நினைப்பது சரியில்லை - நடிகை நித்யா மேனன் ஓபன் டாக்

நித்யா மேனன்

Updated On: 

03 Jun 2025 16:27 PM

 IST

நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தென்னிந்திய மொழியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நித்யா மேனனன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்று வருகின்றது. அந்த வகையில் அவர் அளித்தப் பேட்டியில் பேசியதாவது பெரும்பாளும் ஆண்கள் சாதாரணப் பெண்களிடம் நடந்து கொள்வது போல ஒரு நடிகையிடம் நடந்துக்கொள்வது கிடையாது. ஏதேனும் பொது நிகழ்ச்சியில் நடிகைகளாகிய நாங்கள் கலந்துகொள்ளும் போது ஆண்கள் எங்களுக்கு கைக் கொடுக்கவும், எங்களுடன் உரசி நின்று புகைப்படம் எடுக்கவுமே விருப்பப்படுகிறார்கள். இதனை அவர்கள் சாதாரன பெண்களிடம் செய்வது இல்லை என்றும் நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தொடந்து பேசியுள்ள அவர், நடிகைகள் என்றால் சாதாரணமாக தொட்டு விடலாம் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அப்படி எங்களை அவர்கள் தொடுவதற்கு நாங்கள் என்ன பொம்மைகளா என்றும் நடிகை நித்யா மேனன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை நித்யா மேனனின் இன்ஸ்டா பதிவு:

நடிகை நித்யா மேனனின் அறிமுகம்:

1998-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த நடிகை நித்யா மேனன் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ஆகாஷ கோபுரம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்த இவர் 2011-ம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் நடித்தப் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படங்கள்:

நடிகை நித்யா மேனன் நடிப்பில் இறுதியாக வெளியானப் படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார். நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மிகவும் வித்யாசமான கதையில் நடிகை நித்யா மேனனின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகை நித்யா மேனன் தற்போது நடிகர் தனுஷ் இயக்கு நடிக்கும் இட்லி கடைப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதகா படக்குழு முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

அதே போல நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகை நித்யா மேனன் நடித்துள்ள படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படி இரண்டு படங்கள் நித்யா மேனன் நடிப்பில் அடுத்து அடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்