பாம்பு சட்டை படத்திற்கு மாநில விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் எக்ஸ் போஸ்ட்!
Actress Keerthy Suresh Thanks to State Govt: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்களுக்கும் நடிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மாநில விருது அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையில் விருது வென்ற கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பதிவி வைரலாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பாம்பு சட்டை. இந்தப் படத்தினை இயக்குநர் ஆடம் தாசன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் குரு சோமசுந்தரம்,
பானு, சார்லி, கே. ராஜன், ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திரன், சரவண சுப்பையா, நிவாஸ் ஆதித்தன், லிசி ஆண்டனி, பி.வி.சந்திரமௌலி, ஆதிரா பாண்டிலட்சுமி, குழந்தை தேஜா, ஜான் ரஞ்சித், ஷான், மேத்யூ வர்கீஸ், நாகேந்திர பிரசாத், சாந்தினி தமிழரசன் உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அஜீஷ் இசையமைத்து இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனங்களான பிக்சர் ஹவுஸ் மற்றும் சினிமா சிட்டி சார்பாக தயாரிப்பாளர்கள் மனோபாலா, கே.கங்காதரன் மற்றும் டி.நடராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் நாடு அரசின் மாநில விருதை வென்றுள்ள நிலையில் அதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்:
எனக்கு முதல் மாநில விருது கிடைத்ததற்கு தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. எனது இயக்குனர் ஆடம் தாசன் சார், எனது தயாரிப்பாளர்கள் மேஜிக் பிரேம்கள், ராதிகா மேடம் சரத்குமார் சார் ஆகியோருக்கு மிக்க நன்றி. எனது முதல் தமிழ் படத்திலிருந்து எனக்கு அன்பைப் பொழிந்ததற்காகவும், மனோபாலா சார், இன்று நீங்கள் இதைக் காண இங்கே இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் எனது குழுவினருக்கும் நன்றி. எனது சக விருது பெற்ற அனைவருக்கும் எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
Also Read… சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்- வைரலாகும் ஜோடியின் போட்டோ!
கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
My heartfelt gratitude to the Government of TamilNadu for my first state award 🙏🏻
A Big Thanks to my director #AdamDasan sir, my producers @magicframes2011 @realradikaa ma’am @realsarathkumar sir for showering me with all the love from my first Tamil film and #Manobala sir, wish… pic.twitter.com/C5MFQENcMb
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 13, 2026
Also Read… My Lord: சசிகுமாரின் மனிதம் ஜெயித்ததா? மை லார்ட் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!