கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் படத்தில் டைட்டில் வீடியோவை வெளியிட்ட அனிருத்

Actor Kishen Das: நடிகர் கிஷன் தாஸ் மற்றும் நடிகர் ஹர்ஷத் கான் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிமுக வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சாரங் தியாகு இயக்க உள்ளார்.

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் படத்தில் டைட்டில் வீடியோவை வெளியிட்ட அனிருத்

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான்

Published: 

29 May 2025 22:45 PM

சின்னத்திரையில் பிரபலமான சீரியலான ஆனந்தம் சீரியலில் வில்லியாம மிரட்டியவர் நடிகை பிருந்தா தாஸ். இவரின் மகன் தான் நடிகர் கிஷன் தாஸ் (Kishan Das). இவர் முதன்முதலாக இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வைப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் டர்புகா சிவா இயக்கத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் மீத்தா ரகுநாத், ஹரிஷ் குமார், கௌதம் சிஎஸ்வி, வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். பள்ளி பருவம் முதல் இளைஞர்களாக தங்களது வாழ்க்கையில் முன்னேறும் வரை இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேறபைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இயக்குநர் டர்புகா சிவாவே இசையமைத்து இருந்து குறிப்பிடத்தக்கது. படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும்  கிஷன் தாஸ் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் கிஷன் தாஸ் சிங்க், சிங்கப்பூர் சலூன், தருணம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுதப் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்தப் படத்தில் நடிகர் கிஷன் தாஸ் உடன் இணைந்து நடிகர் ஹர்ஷத் கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக யூடியூப் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது கிஷன் தாஸ் உடன் புதிய படத்தில் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சாரங் தியாகு இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு ஆரோமலே என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.