ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த செயல் – யோகி பாபு சுவாரஸ்ய பேச்சு

Actor Yogi Babu: நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டும் இன்றி அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த செயல் - யோகி பாபு சுவாரஸ்ய பேச்சு

யோகி பாபு

Published: 

01 Jun 2025 13:40 PM

 IST

நடிகர் யோகி பாபு (Actor Yogi Babu) தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வருகிறார். கோலிவுட் சினிமாவில் காமெடியன்களாக இருந்து பின்பு நாயகன்களான காமெடியன்கள் மீண்டும் காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டும் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் நடிகர் யோகி பாபு அவ்வாறு இல்லாமல் கதையில் நாயகனாக நடித்தாலும் பல நடிகர்களின் படங்களில் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிய நடிகர்கள் படங்கள் மட்டும் இன்றி சின்ன சின்ன நடிகர்கள் மற்றும் அறிமுக நடிகர்களின் படங்களிலும் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. சமீபத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்த ஜோரா கைய தட்டுங்க என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

ஜெயிலர் 2 படத்தில் நடிகர் யோகி பாபு:

இந்த நிலையில் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் காமெடி நடிகராக நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமாரிடம் இந்த பாகத்தில் யோகி பாபுவை சும்மா விடக்கூடாது. அவர் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் என்னை டார்ச்சர் செய்துவிட்டார். அதனால் இந்தப் பாகத்தில் அதனை சரிக்கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் குறித்து பேசிய யோகி பாபு தற்போது உள்ள இயக்குநர்களில் அதிக நகைச்சுவை உணர்வு உள்ள இயக்குநர் நெல்சன் மட்டும் தான். ரஜினிகாந்த் சார் ஒவ்வொரு நாளும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது மிகவும் ஆர்வமாக வருகிறார் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றி:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் ரூபாய் 600 கோடிகள் வரை வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவித்தது.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..