அரசன் படத்தில் எனது கதாபாத்திரம் பற்றி எதுவும் தெரியாது – விஜய் சேதுபதி
Actor Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அரசன் படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி வில்லனாகவும், சிறப்பு காதாப்பாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படம் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ரெய்ன் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. மேலும், தெலுங்கு சினிமாவில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள படம் அரசன். நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள நிலையில் படம் குறித்து வெளிப்படையாக விஜய் சேதுபதி பேசியது வைரலாகி வருகின்றது.
அரசன் படத்தில் எனது கதாபாத்திரம் பற்றி எதுவும் தெரியாது:
அதன்படி விஜய் சேதுபதி பேசியதாவது, உண்மையாகச் சொல்லப்போனால், அரசன் என்ன மாதிரியான கதாபாத்திரம் என்று எனக்குச் சரியாகத் தெரியாது. வெற்றி சார் என்னிடம், ‘சேது கதையை நான் எழுதிக்கொண்டிருந்தபோது, உங்கள் முகம் என் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. நான் அதை அப்படியேயும் எழுதலாமா?’ என்று கேட்டார். நான் அவரிடம், ‘சார், உங்கள் நினைவில் நான் இருப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சிதான்—தயவுசெய்து எழுதுங்கள்’ என்று சொன்னேன்.
அவருடன் பணியாற்றுவது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவருடைய அறிவும் அக்கறையும் மிகவும் ஆழமானவை—அதை நான் உண்மையிலேயே போற்றி மதிக்கிறேன். நீங்கள் சும்மா இருக்கும்போதே நிறைய கற்றுக்கொள்ளலாம். ஆனால், அவருடன் பணிபுரியும்போது, நீங்கள் இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ளலாம் என்று அந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
Also Read… அரசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு மற்றும் வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் விஜய் சேதுபதி பேச்சு:
“I don’t know anything about my role on #Arasan🌟. VetriMaaran sir told me, while writing a character, I’m coming into his imagination. I don’t know how many days of shoot is there for me, VetriMaaran sir will take care of everything🫶”
– #VijaySethupathipic.twitter.com/HbDMyAzbjU— AmuthaBharathi (@CinemaWithAB) December 17, 2025
Also Read… ஹேப்பி ராஜ் படத்தில் அப்பாஸ் நடிப்பு எப்படி இருக்கும்? இயக்குநர் ஓபன் டாக்