அரசன் படத்தில் சிலம்பரசனுடன் இணைந்த விஜய் சேதுபதி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Actor Vijay Sethupathi: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவர் தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு கை குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இவரது தந்தை டி.ராஜேந்தர் தமிழ் திரையுலகில் மிகப் பெரிய ஆளுமையாக இருக்கின்ற நிலையில் அவரது மகன் சிலம்பரசன் பிறந்ததுமே சினிமாவிற்கு தத்துக்கொடுத்துவிட்டார் என்றே ரசிகர்கள் கூறுவார்கள். அப்படி சிறு வயதில் இருந்தே தொடர்ந்து பலப் படங்களில் நடித்து வரும் சிலம்பரசன் நடிகராக மட்டும் இல்லாமல் சினிமாவில் இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
நடிகர் சிலம்பரசன் சில ஆண்டுகளாக உடல் எடை கூடி சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் அவரின் சினிமா வாழ்க்கை முடிந்தது என்று பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் சிம்புவின் ரசிகர்கள் மட்டும் அவர்களின் நம்பிக்கையை கைவிடாமல் இருந்தனர். அதன்படி தனது ரசிகர்களிடன் நம்பிக்கையை வீணடிக்காமல் தனது உடல் எடையை குறைத்து மாஸாக கம்பேக் கொடுத்தார் நடிகர் சிலம்பரசன். இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
சிலம்பரசன் படத்தில் இணைந்த நடிகர் விஜய் சேதுபதி:
இந்த நிலையில் நடிகர் சிலமபரசன் தனது 49-வது படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்தார். அந்தப் படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம் என அனைத்தையும் ஏற்று நடிக்கிறார். இந்த நிலையில் இவர் சிலம்பரசன் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிவின் பாலி – வைரலாகும் தகவல்
அரசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
மனிதம் இணைகிறது
மகத்துவம் தெரிகிறது#VetriMaaran @SilambarasanTR_@VijaySethuOffl @anirudhofficial #SilambarasanTR #ARASAN pic.twitter.com/PlO6lqPs71— Kalaippuli S Thanu (@theVcreations) November 25, 2025
Also Read… இந்த கியூட் பாப்பா யார் தெரியுதா? அஜித் – விஜய் பட நாயகிதான்!