அடுத்தப் படம் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன மாஸ் அப்டேட்
Sivakarthikeyan New Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பராசக்தி படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் நடிக்க உள்ள படம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நாயகனாக தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 14 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தற்போது வரை 25 படங்களில் நடித்து முடித்துள்ளர். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் நகைச்சுவையான கதைகளை மையமாக வைத்து வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், காமெடி அதிகமாக இருந்ததால் குழந்தைகள் ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிஅக்ர் சிவகார்த்திகேயன் சமீப காலமாக தொடர்ந்து காமெடியை மட்டும் மையமாக வைத்து இல்லாமல் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் தொடர்ந்து வசூலில் 100 கோடிகளைக் கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து பராசக்தி படம் வருகின்ற 7-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது.
அடுத்தப் படம் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன மாஸ் அப்டேட்:
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெளியே வரும் போது செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் தனது அடுத்தப் படம் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, எனது அடுத்த படத்திற்கான கதை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரை இறுதி செய்துவிட்டோம். அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இது நிச்சயமாக ரசிகர்கள் என்னிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு படமாக இருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட அனைத்து வயதினராலும் இது விரும்பப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… பூஜையுடன் தொடங்கியது தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு – வைரலாகும் புகைப்படங்கள்
இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயன் பேச்சு:
#Sivakarthikeyan about #SK26 (Sivakumar – RKFI Film)🎬:
“We have locked the content, Director & Producer for my next film🔐. Announcement is coming soon. Definitely it will be a film which the audience has been expecting from me🔥. It will be liked by all age categories… pic.twitter.com/B483bd7mGI
— AmuthaBharathi (@CinemaWithAB) February 5, 2026
Also Read… வெற்றிமாறன் கதை சொல்லும்விதம் வித்யாசமானது – நடிகர் சிலம்பரசன் ஓபன் டாக்