Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அந்தப் படத்தில மணிரத்னம் சார் ஏன் என்னை நடிக்க கூப்பிடலனு அப்பாகிட்ட அழுதேன் – நடிகர் சிலம்பரசன் ஓபன் டாக்

Actor Silambarasan: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்தப் படத்தில மணிரத்னம் சார் ஏன் என்னை நடிக்க கூப்பிடலனு அப்பாகிட்ட அழுதேன் – நடிகர் சிலம்பரசன் ஓபன் டாக்
நடிகர் சிலம்பரசன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 May 2025 09:51 AM

நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan) தற்போது இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று 24-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் உட்பட படக்குழுவினர், பிரலங்கள் என பலரும் பங்கேற்றனர். இசை வெளியீட்டிற்கு பிறகு படக்குழுவினர் ஒவ்வொருவராக மேடையேறி படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் இயக்குநருடன் பணியாற்றியது குறித்து, சக நடிகர்கள் உடன் நடித்த அனுபவம் குறித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அழுத சிம்பு:

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டில் பேசிய நடிகர் சிலம்பரசன் தான் சிறு வயதில் இருக்கும் போது இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை என்று அழுதது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அஞ்சலினு ஒரு படம் எடுத்தார் மணி சார். படம் ஃபுல்லாவே சின்ன பசங்களா நடிச்சு இருப்பாங்க. அதுல அஞ்சலி பாப்பா ஓட அண்ணனா ஒரு சின்ன பையன் தெலுங்கு நடிகர் அவரு நடிச்சு இருப்பார்.

அப்ப நான் அந்தப் படத்த பாத்துட்டு வீட்ல ஓ…னு அழ ஆரம்பிச்சுட்டேன். ஏன் என்ன மணி சார் இந்த படத்துக்கு கூப்டல? நானும் இதே வயசு தான. நான் இங்க தான நடிச்சுட்டு இருக்கேன். ஏன் அவர் கூப்டலனு அழுதேன். அதுக்கு என் அப்பா, இல்லப்பா.. அது படத்துக்கு ஏத்த மாதிரி இருந்து இருக்கும். இல்லனா வேற எதாவது காரணம் இருக்கும் என்று நான் சின்ன பையனு என்ன சமாதானம் பன்னினார்.

நடிகர் சிம்புவின் இன்ஸ்டா பதிவு:

அப்போ நான் நினச்சேன். சரி இவரு நம்மல கூப்டவே மாடடரு போலிருக்கு. இவருக்கும் நமக்கும் செட்டே ஆகாதுனு நினச்சுட்டு இருந்தேன். ஏன்னா நான் வளந்ததுக்கு அப்பறமா நடிச்ச எல்லா படமும் மாஸ் மசாலா படம் என்று கூற அங்கிருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சிம்புவின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகின்றது.

மம்முட்டியா இல்ல மோகன்லாலா... மாளவிகா மோகனனின் சூப்பர் பதில்
மம்முட்டியா இல்ல மோகன்லாலா... மாளவிகா மோகனனின் சூப்பர் பதில்...
”பெண்களுக்கு தைரியம் இல்லை” பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!
”பெண்களுக்கு தைரியம் இல்லை” பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!...
தக் லைஃப் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா
தக் லைஃப் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா...
ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்!
ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்!...
வீட்டில் எந்த திசையில் விளக்கேற்றினால் என்ன பலன்?
வீட்டில் எந்த திசையில் விளக்கேற்றினால் என்ன பலன்?...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு...
பருத்திவீரன் டூ மெய்யழகன்... ஹேப்பி பர்த்டே கார்த்தி!
பருத்திவீரன் டூ மெய்யழகன்... ஹேப்பி பர்த்டே கார்த்தி!...
ஜூன் 2025 ராசிபலன்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்
ஜூன் 2025 ராசிபலன்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்...
"ரெய்டுக்கு பயந்து தான் டெல்லி சென்றார்" இபிஎஸ் விமர்சனம்
”இனி அமைதியாக இருக்க மாட்டோம்" கனிமொழி எம்.பி பேச்சு
”இனி அமைதியாக இருக்க மாட்டோம்
மணிரத்னம் சார் ஏன் என்னை நடிக்க கூப்பிடலனு அப்பாகிட்ட அழுதேன்
மணிரத்னம் சார் ஏன் என்னை நடிக்க கூப்பிடலனு அப்பாகிட்ட அழுதேன்...