ஜெயிலர் 2 படத்தில் ரஜினியை அழகாக பயன்படுத்தியிருக்கார் நெல்சன் – சிவராஜ்குமார்
Actor Shivarajkumar about Jailer 2: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது ஜெயிலர் 2 படம். இந்தப் படத்தில் பான் இந்திய அளவில் உள்ள பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜெயிலர் 2
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றப் படம் ஜெயிலர். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், ரம்யா கிருஷ்ணன். மிர்ணா மேனன் என பலர் நடித்து இருந்தனர். மேலும் பான் இந்திய மொழிகளில் இருந்து நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷராஃப் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இவர்களின் எண்ட்ரி படத்தில் மாஸாக காட்டப்பட்டு இருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் படத்தின் அடுத்தப் பாகத்திற்காக லீட் வைக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த சிலமாதங்களுக்கு முன்பே தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினியை அழகாக பயன்படுத்தியிருக்கார் நெல்சன்:
அதில் சிவராஜ்குமார் பேசியதாவது, இது முதல் பாகத்தின் தொடர்ச்சி, ஒரு இரண்டாம் பாகம். மேலும், இந்தப் படத்தில் இது எனக்கு ஒரு சிறப்புத் தோற்றத்தை விடவும் மேலானது. நான் ஏற்கனவே ஒரு நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டேன். நாளை மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறேன். ஜனவரி 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். ‘ஜெயிலர்’ ஒரு உலகளாவிய உள்ளடக்கம் கொண்ட படம். இயக்குநர் நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வயதுக்கு ஏற்ற ஒரு பாத்திரத்தில் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினார். அதனால்தான் அந்தப் படம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது என்று நடுஜர் சிவராஜ்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இணையத்தில் கவனம் பெறும் சிவராஜ்குமார் பேச்சு:
#Jailer2 – #Shivarajkumar in a Recent Interview ⭐:
• It’s a Continuation of Part 1 – A Sequel and It’s more than a Cameo for me in this film..💥I’ve shot for one day already.. And I’m joining the shoot tomorrow.. Again I’ll join on Jan 8, 9 and 10..🌟
• #Jailer was a… pic.twitter.com/YuCyeOl5PM
— Laxmi Kanth (@iammoviebuff007) December 22, 2025
Also Read… பராசக்தி ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் கூறுவார்கள் – இயக்குநர் சுதா கொங்கரா