கெணத்த காணோம் படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட ரவி மோகன்

Actor Ravi Mohan released Othaiyadi song from Kenatha Kanom Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள கெணத்த காணோம் படத்தின் முதல் சிங்கிள் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கெணத்த காணோம் படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட ரவி மோகன்

கெணத்த காணோம்

Published: 

08 Mar 2026 12:57 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பது மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டும் இல்லாமல் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். அதில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை காமெடி நடிகர்களாக இருந்த நடிகர்கள் சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு ஆகியோர் கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்து வருகின்றனர். இதில் மற்ற இருவரும் நாயகனாக நடிக்கத் தொடங்கியப் பிறகு தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகின்றனர். காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நடிகர் யோகி பாபு மட்டும் தொடர்ந்து கதையின் நாயகனாக நடித்தாலும் காமெடி கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடித்து வருகிறார். இதன் காரணமாக தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் யோகி பாபு. இந்த நிலையில் இவர் நாயகனாக நடித்துள்ள கெணத்த காணோம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கெணத்த காணோம் படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட ரவி மோகன்:

இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க நடிகை லவ்லி நாயகியாக நடித்துள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் வருகின்ற மார்ச் மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் கெணத்த காணோம் படத்தில் உருவாகி உள்ள ஒத்தையடி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை நடிகர் ரவி மோகன் தற்போது வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read…  ரசிகர்களே தயாரா?.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட ட்ரெய்லர்!

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் போட்டோ

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..