வார்த்தை ஜாலத்திற்காக மட்டுமே த்ரிஷா குறித்து அப்படி பேசினேன் – வருத்தம் தெரிவித்து ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்

Parthiban explained talking about Trisha in award function: விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகை த்ரிஷாவை குறித்து நடிகர் பார்த்திபன் பேசியது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வார்த்தை ஜாலத்திற்காக மட்டுமே த்ரிஷா குறித்து அப்படி பேசினேன் - வருத்தம் தெரிவித்து ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்

பார்த்திபன் மற்றும் த்ரிஷா

Published: 

09 Mar 2026 10:44 AM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல பொது வாழ்க்கையில் சினிமா பிரபலங்கள் பேசுவதும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் பார்த்திபனிடம் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நடிகர் பார்த்திபன் த்ரிஷாவை அவரது கதாப்பாத்திரமான குந்தவை என்று குறிப்பிடதுடன், குந்தவையை வீட்டிலேயே சில நாட்களுக்கு குந்த வைத்தால் எந்த பிரச்சனையும் வராது என்று எதுகை மோனையாக பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலானது. மேலும் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடிகை த்ரிஷாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நடிகர் பார்த்திபனின் பெயரைக் குறிப்பிடாமல் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கூறியதாவது, சமீபத்திய ஒரு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கூறியதாவது, ஒரு நபர் தனது உதவியாளர் மூலம் விடுத்த வேண்டுகோளிற்கு ஏற்ப எனது பெயரும் புகைப்படமும் கடைசி நிமிடத்தில் இணைக்கப்பட்டதாக தெரிவித்தனர். மைக் கையில் இருந்தால் ஒரு கருத்தை புத்திசாலித்தனமாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாற்றாது. அது முட்டாள்தனத்தை சத்தமாக ஆக்குகிறது. அறிவு இல்லாத கரடுமுரடான வார்த்தைகள், அவை யாரை நோக்கிச் செல்கின்றன என்பதை விட, அதனைப் பேசுபவர் பற்றியே அதிகம் கூறுகின்றன என்று தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவில் பார்த்திபனின் பெயரை அவர் குறிப்பிடவே இல்லை.

வார்த்தை ஜாலத்திற்காக மட்டுமே த்ரிஷா குறித்து அப்படி பேசினேன்:

இந்த நிலையில் பார்த்திபன் இதற்கு வருத்தம் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விருது விழாவில் ரேப்பிட் பயர் போல ஒவ்வொரு போட்டோவாக 20க்கும் மேல் ஒளிபரப்பட்டது. அதில் த்ரிஷாவின் புகைப்படம் வரும் போது அரங்கத்தில் இருந்தவர்கள் குந்தவை குந்தவை என்று கத்தினர். உடனே வார்த்தை ஜாலமாக மட்டுமே குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கவும் என்பது போல பேசியதாக அந்த ஆடியோவில் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் தனது பேச்சிற்கு வருத்தமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… விரைவில் வெளியாகும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் – வைரலாகும் தகவல்

நடிகர் பார்த்திபன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று மாலை யூத் படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் சிம்பு – அப்டேட் இதோ!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..