ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தை செதுக்கி இருக்கார் – நடிகர் நட்டி சுப்ரமணியம்!

Karuppu Movie : சினிமாவில் நாயகன், வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம் என தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் நட்டி சுப்ரமணியம். இவர் தற்போது அளித்தப் பேட்டி ஒன்றில் கருப்பு படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தை செதுக்கி இருக்கார் - நடிகர் நட்டி சுப்ரமணியம்!

நட்டி சுப்ரமணியம்

Published: 

22 Sep 2025 21:22 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடிகராக நடித்து வருபவர் நட்டி சுப்ரமணியம். தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் படங்களில் நடித்து வந்த நடிகர் நட்டி சுப்ரமணியம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான நாளை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு வெளியான சக்ர வியூகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் நாயகனாக நடித்து வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் நட்டி சுப்ரமணியம் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான சதுரங்க வேட்டைப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி வில்லனாகவும் நடிகர் நட்டி சுப்ரமணியம் நடித்து அசத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் நிறம் மாறும் உலகில். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா உடன் இணைந்து கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு படம் குறித்து வெளிப்படையாக பேசிய நட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் கருப்பு படம் குறித்து நட்டி சுப்ரமணியம் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தை செதுக்கி வருகிறார். இந்தப் படம் நிச்சயமாக நடிகர் சூர்யாவின் படங்களில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படம் வெளியாகும் போது எப்படி இருக்கிறது என்பதும் உங்களுக்கே புரியவரும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read… இட்லி கடை படத்தின் கதை அந்த பிரபலத்தின் பயோ பிக்கா? இணையத்தில் வைரலாகும் செய்தி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கைதி 2 படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? வைரலாகும் தகவல்