ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் லீடர் படம்!

Actor Legend Saravanans Leader movie release update viral on social media: தமிழ் சினிமாவில் 50 வயதுக்கு மேல் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகர் லெஜெண்ட் சரவணன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் லீடர் படம்!

லீடர் படம்

Published: 

25 Mar 2026 21:42 PM

 IST

தமிழக மக்களிடையே தொழிலதிபராக பிரபலமான குடும்பம் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பம். இவர்களின் குடும்பத்தினர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், செல்வரத்தினம் மற்றும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் என பலவற்றை நடத்தி வருகின்றனர். இப்படி ஒரு தொழிலதிபர் குடும்பமாக தமிழக மக்களிடையே பிரபலமான அவர்களின் குடும்பத்தில் இருந்து 50 வயதிற்கு பிறகு நடிப்பதற்காக சினிமா உலகிற்கு என்ட்ரி கொடுத்தார் லெஜண்ட் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனரான லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான போது பல ட்ரோல்கள் வந்தது. ஆனால் அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் முதல் படத்தை வெளியிட்டார். அதன்படி தி லெஜெண்ட் படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது படம் வெளியாக உள்ளது.

முதல் படத்தில் இருந்த தோற்றத்தை விட இரண்டாவது பாகத்தில் முற்றிலுமாக மாற்றி உள்ளார் லெஜெண்ட் சரவணன். அதன்படி இந்த இரண்டாவது படத்திற்கு லீடர் என்று பெயர் வைக்கபப்ட்டுள்ளது. மேலும் இயக்குநர் துரை செந்தில்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் செண்டிமெண்ட் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் லீடர் படம்:

இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள லீடர் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Kara Movie: கர படத்தில் கந்தசாமியாககே.எஸ்.ரவிக்குமார்- படக்குழு வெளியிட்ட அறிமுக போஸ்டர்!

லீடர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 47 படத்தில் நஸ்ரியாவிற்கு ஆக்‌ஷன் சீன் இருக்குதா? வைரலாகும் தகவல்

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..