கவினின் புதிய படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் – அப்டேட் இதோ!

Actor Kavin's 11th Movie Update Hera: தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

கவினின் புதிய படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் - அப்டேட் இதோ!

கவின்

Published: 

22 Apr 2026 20:16 PM

 IST

சின்னத்திரையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்ததன் மூலம் தனக்கு என்ற ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகி கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். ஆனால் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவரவில்லை. அதனைத் தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு முதல் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா, ஸ்டார், ப்ளடி பெக்கர், கிஸ் மற்றும் மாஸ்க் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் கவின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்றது. அதன்படி தற்போது நடிகர் கவின் நடிகை நயன்தாரா உடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது அடுத்தடுத்து பிசியாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

கவினின் 11-வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர்:

அதன்படி நடிகர் கவின் நடிக்க உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. இது நடிகர் கவின் நடிப்பில் உருவாக உள்ள 11-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன் பரமசிவம் இயக்க உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக இந்தப் படத்தின் மூலமாக அறிமுகம் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை பியாண்ட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Priyanka Mohan: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி.. அவரை பாராட்ட விரும்புகிறேன் – பிரியங்கா மோகன் பேச்சு!

நடிகர் கவின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் வாலி… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..