AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viralimalai Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் விராமலை தொகுதி.. மக்களின் ஆதரவு யாருக்கு?

நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் அதிகமாக உள்ளன. விராலிமலை, அண்ணாவாசல், கீரனூர், பொன்னமராவதி உள்ளிட்ட பல பகுதிகள் இதில் அடங்குகின்றன. இங்கு அமைந்துள்ள விராலிமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல், மயில் சரணாலயம் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும். குறிப்பாக மக்காச்சோளம், பச்சைப்பயறு, நிலக்கடலை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Apr 2026 23:08 PM IST
விராலிமலை சட்டமன்ற தொகுதி தமிழகத்தில் முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். இது புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு பொதுத்தொகுதியாகும்.

1 / 6
இந்த தொகுதியில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் அதிகமாக உள்ளன. விராலிமலை, அண்ணாவாசல், கீரனூர், பொன்னமராவதி உள்ளிட்ட பல பகுதிகள் இதில் அடங்குகின்றன. இங்கு அமைந்துள்ள விராலிமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல், மயில் சரணாலயம் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும். குறிப்பாக மக்காச்சோளம், பச்சைப்பயறு, நிலக்கடலை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

2 / 6
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர் 1,00,279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் பழனியப்பன் 78,581 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் நான்காவது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 / 6
விராலிமலை தொகுதி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது. அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகம் பலமுறை வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து சி. விஜயபாஸ்கர் இத்தொகுதியில் தனது வெற்றியை தக்க வைத்துள்ளார். அவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

4 / 6
அரசியல் ரீதியாக முக்கியமான இந்த தொகுதியில், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சாலை வசதிகள் குறைவு, நீர் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு இல்லாமை மற்றும் விவசாயத்துக்கு நிலையான ஆதரவு தேவை போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

5 / 6
வாக்காளர்கள் வளர்ச்சி, குடிநீர், வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களை மையமாக வைத்து வாக்களித்து வருகின்றனர். வரவிருக்கும் தேர்தலில், அதிமுக சார்பில் சி. விஜயபாஸ்கர், திமுக சார்பில் கே.கே. செல்லப்பாண்டியன், தமிழக வெற்றி கழகம் சார்பில் முருகேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்தியலட்சுமி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

6 / 6
Follow Us