தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும் – நடிகர் பரத் ஓபன் டாக்

Actor Bharath Recent Interview Viral On Social Media: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் பரத். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும் - நடிகர் பரத் ஓபன் டாக்

பரத்

Published: 

03 Apr 2026 19:23 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் திருவிளையாடல் ஆரம்பம். இயக்குநர் பூபதி பாண்டியன் இந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தை எழுதி இயக்கி இருந்தார். படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ், டி.எஸ்.பி.கே.மௌலி, இளவரசு,  மயில்சாமி, கிரேஸ் கருணாஸ், கார்த்திக் கண்ணையன், காதல் சுகுமார், வர்ணிகா, பசி சத்யா, மீனா குமாரி, கிருஷ்ணமூர்த்தி, சிங்கமுத்து, கடுகு ராமமூர்த்தி, பயில்வான் ரங்கநாதன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். காமெடி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் காமெடிகள் தற்போது உள்ள இளைஞர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் பரத் சமீபத்தில் இந்தப் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகினது.

தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும்:

அந்த வகையில் இன்று நடிகர் பரத்தின் நடிப்பில் உருவாகி உள்ள காளிதாஸ் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் பூபதி பாண்டியன் திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்காக தன்னைதான் முதலில் நாடினார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் பிப்ரவரி 14 படத்தில் நடித்து கொண்டு இருந்ததாலும் வேறு சில காரணங்களாலும் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அது என் சினிமா கெரியரில் மிகப்பெரிய லாஸ் என்று பரத் வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… 16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் பையா படம்… கொண்டாடும் படக்குழு

இணையத்தில் வைரலாகும் பரத்தின் பேச்சு:

Also Read… மலையாள சினிமாவில் ஹிட் அடித்த சத்தா பச்சா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ

Follow Us
Related Stories
Rachitha Mahalakshmi: அந்த படத்தில் நிறைய ட்ரோல்.. நான் பயங்கரமா அழுதேன் – மௌனம் உடைத்த ரச்சிதா!
தென்னிந்திய சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ
LIK: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்காததற்கு இதுதான் காரணமா? திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன விசயம்
Ones More: கொஞ்சும் தென்றலா.. உயிர் கொல்லும் மின்னலா.. ஒன்ஸ் மோர் படத்தின் ‘இந்திரா’ வீடியோ பாடல் வெளியீடு!
டிமாண்டி காலனி 3 பட ஷூட்டிங் ஓவர்.. திரில்லர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..