அவர் கண்ண மட்டும் பாக்காத… லத் லைஃப் ஷூட்டிங்கில் அசோக் செல்வனுக்கு சிம்பு சொல்லிகொடுத்த பாடம்
நடிகர் அசோக் செல்வன் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அசோக் செல்வன் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அசோக் செல்வன் (Actor Ashok Selvan). இவர் 2013-ம் ஆண்டு இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். நடிகர் விஜய் சேதுபதி நாயனகான நடித்த இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவின் நண்பராக நடிகர் அசோக் செல்வன் நடித்திருப்பார். எதிர்பாராத சூழலில் விஜய் சேதுபதியுடன் இணையும் இவர்கள் அவருடன் சேர்ந்து கடத்தல் தொழிலை செய்ய திட்டமிடுகிறார்கள். டார்க் காமெடியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் பீட்சா 2 படத்தில் நடித்தார். இதில் கதையின் நாயகனாகத் தோன்றினார் நடிகர் அசோக் செல்வன்.
அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான தெகிடி, சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், சம்டைம்ஸ், ஓ மை கடவுளே என தொடர்ந்து இவரது கதாப்பாத்திரத்திற்கு வரவேற்பு தரும் படங்களில் நடித்து வந்தார். பின்பு நின்னிலா நின்னிலா என்ற தெலுங்கு படத்தில் மூலம் தெலுங்கி சினிமாவில் காலடி வைத்தார் நடிகர் அசோக் செல்வன்.
அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் கதையின் நாயகனாகவும், சிறப்பு கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதில் ப்ளூ ஸார், பொன் ஒன்று கண்டேன், எமக்கு தொழில் ரெமான்ஸ் படங்களில் ப்ளூ ஸ்டார் மட்டும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் கொடுத்தது.
இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முன்னதாக இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் கமல் ஹாசன் நடிகர் அசோக் செல்வனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அசோக் செல்வன் ஷூட்டிங் ஸ்டாட்டில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் முதல் நாள் ஷூட்டிங்கின் போது மிகவும் படபடப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். காரணம் முதல் நாளே நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டிய காட்சி. மூன்று பக்கங்களுக்கு வசனம் இருக்கு. காலையில 7 மணிக்கே எனக்கு நடுக்கம் கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அசோக் செல்வன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
மேலும் அதற்கு முன்னதாக நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து ஒரு காட்சி நடிக்க வேண்டி இருந்தது. அப்போது நான் சிம்பு அண்ணாவிடம் நீங்க தான் முன்னாடியே மணி சார் படத்தில நடிச்சு இருக்கீங்கள சொல்லுங்க என்ன பன்றதுனு எனக்கு கமல் சார் கூட நடிக்க கொஞ்சம் பதட்டமா இருக்குனு சொன்னேன்.
உடனே சிம்பு சொன்னது இதுதான், அது கொஞ்சம் கஷ்டமான விசயம் தான் என்று மழுப்பிக்கொண்டே பேசிய அவர், நீ நடிக்கும் போது கமல் சார் கண்ண மட்டும் பாத்துவிடாதே என்று சிம்பு அட்வைஸ் கூறியதாக நடிகர் அசோக் செல்வன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்/ இது தற்போது வைரலாகி வருகின்றது.