அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய எச்1பி விசாதாரர்களின் கணவன், மனைவிகளை நேரடியாக பாதிக்கும் டிரம்ப் அரசின் புதிய விதியை, ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க செனட்டில் புதிய தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டெமோகிராட் கட்சியின் செனட்டர் அலெக்ஸ் படில்லா தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட செனட்டர்கள், இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.