Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith kumar : பயிற்சியில் மும்முரம்… பிரான்ஸில் நடைபெறவுள்ள கார் ரேஸிற்கு தயாராகும் அஜித் குமார்!

Ajith kumar Car Race Training : கோலிவுட் சினிமாவையும் கடந்து பான் இந்தியா வரை புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அஜித் குமார். நடிகர் என்பதையும் தாண்டி உலக நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து விரைவில் பிரான்சில் நடைபெறவுள்ள கார் ரேஸிற்காக அஜித்தின் அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Ajith kumar : பயிற்சியில் மும்முரம்… பிரான்ஸில் நடைபெறவுள்ள கார் ரேஸிற்கு தயாராகும் அஜித் குமார்!
அஜித் குமார்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 01 Jun 2025 22:35 PM

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர்தான் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவரின் நடிப்பில் வெளியான படங்கள் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெறாத நிலையில், கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly)  படமானது எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பைப் பெற்றது. அஜித்தின் நடிப்பில் சமீப வருடத்தில் வெளியான படங்களை ஒப்பிடும்போது இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் முழுவதுமாக கார் ரேஸில் (car race) இறங்கியுள்ளார். கடந்த 2025, ஜனவரி மாதம் முதல் உலகநாடுகளில் (countries of the world)  நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.

முதலில் துபாயில் நடைபெற்ற ஜிடி 24- கார் ரேஸில் மூன்றாவது இடத்தையும், அதன் பிறகு இத்தாலியில் நடைபெற்ற மூன்றாவது இடத்தையும் மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டியில் 2வது இடத்தையும் அஜித்தின் அணி பெற்றது. இந்தியாவின் சார்பாக உலகநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து மேலும் விரைவில் பிரான்சில் நடைபெறவுள்ள ஜிடி-24 கார் ரேஸில் அஜித்தின் அணி கலந்துகொள்ளவுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள அஜித்தின் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அணியுடன் நடிகர் அஜித் குமாரும் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் பயிற்சி செய்யும் வீடியோ :

பத்மபூஷன் அஜித் குமார் :

நடிகர் அஜித் குமார் படங்களைத் தாண்டியும், இந்தியாவின் சார்பாக கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து இந்த 2025ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த 2025 ஏப்ரல் இறுதியில் இந்திய அரசு அஜித்திற்குப் பத்மபூஷன் விருதை வழங்கியிருந்தது. நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் இவர்களின் வரிசையில் நடிகர் அஜித் குமாரும் பத்மபூஷன் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமாரின் 64வது திரைப்படம் :

நடிகர் அஜித்தின் கூட பேட் அக்லி படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கியிர்நுந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின் 64வது படத்தையும் இயக்கவுள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறது.

இது குறித்து நடிகர் அஜித்தும் பத்திரிக்கை பேட்டி ஒன்றில், எனது லக்கி இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன்தான் அடுத்த படத்தில் இணையவுள்ளேன். மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய முட்டை தினம்: முட்டையை வைத்து வீட்டில் செய்யகூடிய 5 ரெசிபி!
தேசிய முட்டை தினம்: முட்டையை வைத்து வீட்டில் செய்யகூடிய 5 ரெசிபி!...
அரசுப் பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
அரசுப் பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்...
தனுஷ் உடன் மோதும் அதர்வா... டிஎன்ஏ படத்தின் ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் உடன் மோதும் அதர்வா... டிஎன்ஏ படத்தின் ரிலீஸ் தேதி இதோ...
பழனி வைகாசி விசாக திருவிழா.. திருக்கல்யாணம், தேரோட்டம் எப்போது?
பழனி வைகாசி விசாக திருவிழா.. திருக்கல்யாணம், தேரோட்டம் எப்போது?...
ஐபிஎல்லில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை..?
ஐபிஎல்லில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை..?...
மத்திய பிரதேசம்: நியூ ட்ரான்ஸ்பார்மருக்கு பூஜை செய்த கிராம மக்கள்
மத்திய பிரதேசம்: நியூ ட்ரான்ஸ்பார்மருக்கு பூஜை செய்த கிராம மக்கள்...
ஆன்லைன் விளையாட்டுகள் மீதான கட்டுப்பாடுகள் செல்லும்
ஆன்லைன் விளையாட்டுகள் மீதான கட்டுப்பாடுகள் செல்லும்...
வைகாசி விசாகம்.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?
வைகாசி விசாகம்.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?...
சென்னைக்கு விமானத்தில் பயணித்த 8 நாள் குழந்தை பலி: காரணம் என்ன?
சென்னைக்கு விமானத்தில் பயணித்த 8 நாள் குழந்தை பலி: காரணம் என்ன?...
மாப்பிள்ளை பிடிக்கல.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு
மாப்பிள்ளை பிடிக்கல.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு...
பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!...