அனிருத் இசையில் தி பாரடைஸ் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியானது அப்டேட்

The Paradise Movie First Single: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் நானி. இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் தி பாரடைஸ் படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

அனிருத் இசையில் தி பாரடைஸ் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியானது அப்டேட்

தி பாரடைஸ்

Published: 

17 Feb 2026 12:26 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் நடிகர் நானி. சினிமாவில் தொடர்ந்து 18 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் நானியின் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் உள்ள ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி அவ்வபோது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இதன் காரணமாகவே தெலுங்கு சினிமாவிற்கு அடுத்ததாக நடிகர் நானிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். மேலும் இவரது படங்கள் தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் நானியின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர் நானியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி பாரடைஸ். இந்தப் படம் முன்னதாக மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றியது குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி பாரடைஸ் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் தி பாரடைஸ் படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் நானி உடன் இணைந்து நடிகர்கள் கயாடு லோஹர் மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான ஆயா ஷேர் வருகின்ற 24-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… SK26: சிவகார்த்திகேயனின் 26வது படத்தை இயக்கும் தாய் கிழவி பட இயக்குநர்- டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பூஜையுடன் தொடங்கியது மரகத நாணயம் 2 படம் – வைரலாகும் போட்டோஸ்

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்