அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ!
Kamal Haasan Next Movie Update: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தினை சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு இணைந்து இயக்க உள்ளனர் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அன்பறிவ் உடன் கமல் ஹாசன்
தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்கள் நடிகர் கமல் ஹாசனை உலக நாயகன் என்று அழைத்து வருகிறார்கள். இவர் நடிக்கும் படங்களில் பல உலகதரம் வாய்ந்த விசயங்களை பயன்படுத்துவதன் காரணமாகவே இவரை உலக நாயகன் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். மேலும் சினிமாவில் சம்பாதிக்கும் பணம் சினிமாவிற்கே செலவிட வேண்டும் என்று உலக அளவில் சினிமாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை சென்று பார்த்து வந்து தமிழ் சினிமாவில் அதனை அறிமுகப்படுத்துவதில் நடிகர் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் கமல் ஹாசனாலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் பல உலகதரம் வாய்ந்த விசயங்களை சினிமாவில் பார்த்தனர் என்று கூறினாலும் மிகையாகாது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படம் குறித்தும் தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருந்தார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல் ஹாசன் மணிரத்னம் உடன் இந்தப் படத்தில் கூட்டணி வைத்ததால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் கமல் ஹாசன்:
இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் என்ற இரட்டையர்கள் நடிகர் கமல் ஹாசனை வைத்து ஒரு ஆக்ஷன் பேக்குடு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக கமல் ஹாசன் 237 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற கோடை காலத்தில் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைராலாகி வருகின்றது.
Also Read… தனுஷ் 55 படத்தில் நாயகி யார் தெரியுமா? இன்று மாலை வெளியாகும் அதிகாரப்பூர்வ அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#KamalHaasan is going to act in the direction of Anbarivu. The shooting of this film is planned to start in the summer.#KH237 pic.twitter.com/bzzOAKAkRV
— Movie Tamil (@_MovieTamil) February 1, 2026
Also Read… நடிகர் சூர்யா உடன் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு – அபிஷன் ஜீவிந்த்