AR Murugadoss : பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்கள் தொடர் தோல்வி – ஏ.ஆர். முருகதாஸ் கருத்து!

AR Murugadoss About Top Tamil Directors Movie Failure : தமிழ் சினிமாவில் விஜய் முதல் அஜித் வரை, பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பிரம்மாண்ட இயக்குநர்களில் படங்கள் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

AR Murugadoss : பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்கள் தொடர் தோல்வி - ஏ.ஆர். முருகதாஸ் கருத்து!

தமிழ் இயக்குநர்கள்

Published: 

17 Aug 2025 21:20 PM

நடிகர் சிவகார்திகேயனின் (Sivakarthikeyan) 23வது படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கியுள்ளார். இந்த மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இந்த படமானது காதல் மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகியயிருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தமிழ் பிரம்மாண்ட இயக்குநர்களின், படங்கள் தொடர் தோல்விகள் குறித்துப் பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவர் அந்த நேர்காணலில், இயக்குநர்கள் ஷங்கர் , மணிரத்னம் குறித்துப் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க : துப்பாக்கி தான் இரண்டாம் பாகம் எடுக்க சரியா இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்

பிரம்மாண்ட இயக்குநர்களைப் பற்றிப் பேசிய ஏ.ஆர். முருகதாஸ் :

அந்த நேர்காணலில், இந்தியன் 2, கேம் சேஞ்சர் மற்றும் தக் லைஃப் படங்களின் தோல்விகள் குறித்து, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஏ.ஆர். முருகதாஸ் , “என்னைப் பொறுத்த வரையிலும் ஷங்கர் சாரும் சரி, மணிரத்னம் சாரும் சரி மிகப் பெரிய இயக்குநர்கள். படங்களின் தோல்வியை வைத்து அவர்களை எடைபோட முடியாதது. சாதாரணமாக ஓர் பிரம்மாண்ட இயக்குநர்களைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் அவர்களின் படத்தில் முக்கியமான கருத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படியாக படத்தை உருவாகியிருப்பார்கள்.

இதையும் படிங்க : ஏழாம் அறிவு படம் குறித்து விஜய் சொன்ன கமெண்ட்… கலகலப்பாக கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்!

மதராஸி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்

அவ்வாறு ஒரு பிரம்மாண்ட படத்தில் அதை கொண்டுவந்தவர் சங்கர் சார்தான். சாதாரணமாக ரோட்டில் செல்பவருக்கு ஒன்றும் ஆகாது, ஆனால் தனியாக ஒரு புதிய சாலையை உருவாக்குபவருக்கு நிறைய முட்கள் மற்றும் கற்கள் எல்லாம் கால்களில் குத்தும். மேலும் படங்களில் வித்தியாசமாக உருவாக்குபவர்களுக்கு தானே, நிறைய அடிகள் விழும். சாதாரணமாக எடுத்த கதையைப்போலவே மீண்டும் எடுத்தால் எது நன்றாகத்தான் ஓடும். மேலும் மணிரத்னம் மற்றும் ஷங்கர் இவர்கள் இருவரையும் உற்றுநோக்கும் ஒரு ரசிகனாக, என்னால் அவர்களை எளிதாக கருத முடியாது” என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.