சென்னையில் 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் விஜய்.. முதல் முறையாக செய்த மாற்றம்..

அந்த வகையில், கடந்த சில நாட்களாக திருப்பூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது சென்னை நகரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சென்னை தியாகராய நகரில், தமிழக வெற்றி கழகம் சார்பில் என். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜய் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னையில் 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் விஜய்.. முதல் முறையாக செய்த மாற்றம்..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Apr 2026 17:36 PM

 IST

சென்னை, ஏப்ரல் 15, 2026: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில், தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் சூழலில், அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பொதுக்கூட்டங்களில் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய்:

அந்த வகையில், கடந்த சில நாட்களாக திருப்பூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது சென்னை நகரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சென்னை தியாகராய நகரில், தமிழக வெற்றி கழகம் சார்பில் என். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜய் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க:  வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.. விவசாயிகள், நெசவாளர்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்த விஜய்..

தியாகராய நகரில் விஜய்யை காண நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இருபுறமும் மக்கள் கூட்டம் அலைமோத, தலைவர் விஜய் ரோட் ஷோ மேற்கொண்டு வருகிறார். டி.நகரில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை சாலைப் பேரணியும் நடத்துகிறார்.

இந்த ரோட் ஷோவின் போது, மக்கள் விஜய்க்கு வழங்கும் பரிசுகளை பெற்றுக் கொண்டு, க்யூட்டான எதிர்வினைகளை வழங்கி வருகிறார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் எகிறும் கோடை வெயில்: 41 டிகிரியைத் தொட்ட வெப்பம்

வேட்பாளர்களை ஆதரித்து ரோட் ஷோ:

தியாகராய நகரில் மட்டுமல்லாமல், ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக தனியாக வாகனத்தில் ஏறி ரோட் ஷோ மேற்கொள்ளும் விஜய், தற்போது முதல் முறையாக வேட்பாளர்களுடன் இணைந்து பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி