மே 5, 2026: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசு அமைக்க, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியுள்ளார் என்று கே.சி வேனுகோபால் தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கே.சி வேணுகோபால் இன்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பெற்ற மிகப்பெரிய வெற்றி, மாநில அரசியலில் நீண்ட காலமாக நிலவி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் இரட்டை ஆதிக்கத்தை முறியடித்துள்ளது.
நாளை நடக்கும் முக்கிய ஆலோசனை:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நாளை காலை சென்னையில் ஆலோசனை மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கும் என வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் பாஜக அரசு அமைவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், இந்த தேர்தல் முடிவுகள் “மதச்சார்பற்ற அரசு” அமைக்க வேண்டியதற்கான தெளிவான ஆதரவாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: விஜய் அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார்? தவெக பதவியேற்பு விழா எப்போது!
இதற்கிடையில், தகவல்களின்படி, காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு அதிகம் எனவும், மாநில அலகு தன்னிச்சையாக முடிவு எடுக்க மத்திய தலைமையகம் முழு சுதந்திரம் வழங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது. புதிய அரசில் மற்ற கட்சிகளும் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் அழைத்தால்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன விஷயம்:
விஜய் முதலில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை அதிகாரப்பூர்வமாக கோர வேண்டும்; அதன் பின்னரே அவர் பதவியேற்பு விழாவில் சத்தியப்பிரமாணம் செய்ய முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், விஜய் காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதியதை உறுதிப்படுத்தினார். “நாங்கள் இதை பரிசீலித்து வருகிறோம். இந்த தேர்தலில் எங்கள் செயல்பாடு மிகச்சிறப்பாக இல்லை. விஜய்க்கு ஆதரவான அலை இருந்தது; குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களிடமிருந்து அவருக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த மண்டேட் மதச்சார்பற்ற அரசுக்கானதாக உள்ளது,” என சோதாங்கர் தெரிவித்தார்.
234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மை இலக்கு 118 ஆகும் நிலையில், தவெக 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எந்தக் கட்சியும் பெரும்பான்மை எண் எட்டாததால், மாநில அரசியல் தற்போது கடும் பேச்சுவார்த்தை நிலைக்குள் நுழைந்துள்ளது. இதற்கிடையில், விஜய் தனது முதல் வெற்றி அறிக்கையை X தளத்தில் வெளியிட்டு, கட்சியை இந்நிலைக்கு கொண்டு வர ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.