விஜய் பிரச்சாரம்.. நவம்பர் 22 இல்லை.. அக்டோபர் 11-ல் கடலூரில் பிரச்சாரம்..

TVK Vijay Campaign: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அக்டோபர் 11, 2025 அன்று கடலூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தப் பயணம் நவம்பர் 22, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சாரம்.. நவம்பர் 22 இல்லை.. அக்டோபர் 11-ல் கடலூரில் பிரச்சாரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

25 Sep 2025 10:07 AM

 IST

செப்டம்பர் 25, 2025: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரவிருக்கும் 2025 அக்டோபர் 11 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தல் நடக்கக்கூடிய நிலையில், தமிழக வெற்றி கழகம் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தைப் பொருத்தவரையில், அதன் முதல் தேர்தலை சந்திக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இது ஒரு புறம் இருக்க, மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு 2024 ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த இரண்டு மாநாடுகளிலும் எதிர்பார்த்ததை விட மக்கள் ஆதரவு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சோஷியல் மீடியாவில் விஜய் டாப்.. ஸ்டாலின், உதயநிதி கம்மி தான்.. இபிஎஸ் நிலை இதுதான்!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம்:

இந்தச் சூழலில், செப்டம்பர் 13, 2025 முதல் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதலில் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் வரவிருக்கும் செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

மேலும் படிக்க: வரதட்சணை கொடுமை புகார்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இதற்கிடையில், அவரது சுற்றுப்பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அக்டோபர் 4, 2025 அன்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அக்டோபர் 11, 2025 அன்று கடலூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சாரத்தில் மாற்றம்:

முதலில் இந்தப் பயணம் நவம்பர் 22, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 11, 2025 அன்று கடலூர் தலைமை தபால் நிலையம் மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்களில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.