பிரச்சனை எடப்பாடி பழனிசாமி தான்.. அண்ணாமலை நல்ல நண்பர் – டிடிவி தினகரன்..

TTV Dinakaran: எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது நான்தான். ஆனால் தற்போது பிரச்சனையே என்னவெனில், அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாகச் செல்ல முடியாது என்பதுதான்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரச்சனை எடப்பாடி பழனிசாமி தான்.. அண்ணாமலை நல்ல நண்பர் - டிடிவி தினகரன்..

கோப்பு புகைப்படம்

Published: 

19 Sep 2025 06:45 AM

 IST

செப்டம்பர் 19, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வலுத்து வருகிறது. கட்சியினருக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியுள்ளனர். அதே சமயம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் உட்கட்சி விவகாரத்தை வெளியில் கூறியதற்காக, அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தார். அவர் சந்தித்த சில நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்றார். அப்போது உள்துறை அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பில், உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரச்சனை அம்முகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தான் – டிடிவி:

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். “முதல்வர் வேட்பாளர் இடத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றாத வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் திரும்பப்போவதில்லை,” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி என்னை பார்க்க தயங்குவார்… முதல்வராக்கியது நாங்கள் தான் – டிடிவி தினகரன் விமர்சனம்

மேலும் அவர், “அண்ணா திமுக என்ற கட்சியே இப்போது கிடையாது; தற்போது இருப்பது எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம். அதிமுகவுக்கோ, பழனிசாமிக்கோ ஓட்டு கேட்பேன் என எங்கும் நான் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது நான்தான். ஆனால் தற்போது பிரச்சனையே என்னவெனில், அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாகச் செல்ல முடியாது என்பதுதான்,” என கூறினார்.

அண்ணாமலை எனக்கு ஒரு நல்ல நண்பர்:

அடுத்து அண்ணாமலை குறித்து பேசிய தினகரன், “அண்ணாமலை என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் இருவரும் அரசியலில் பழகியிருந்தாலும், எங்களின் குணாதிசயங்கள் ஒத்துப் போகின்றன. அண்ணாமலை எப்போதும் யதார்த்தத்தையும் உண்மையையும் பேசக்கூடியவர். நாங்கள் இருவரும் அரசியல்வாதியாக பழகியதே இல்லை.

மேலும் படிக்க: சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?

கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என அண்ணாமலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அண்ணாமலையும் நானும் ஒன்பதாம் தேதி டெல்லிக்கு செல்வதாக இருந்தோம். ஆனால் அன்றைய தினம் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றதால் அது தள்ளிப்போனது,” என குறிப்பிட்டார்.